70 வயதிலும் குமாரியாக வாழும் நடிகை.. ஜெயலலிதாவுக்கு நல்ல தோழி.. நடிகை சச்சுவின் தெரியாத தகவல்கள்!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் திருமணம் செய்யாமல் ஒரு சில நடிகைகள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் சச்சு. அவரது படங்களின் டைட்டிலில் குமாரி சச்சு என்று போடப்படும்.

குமாரி சச்சு மயிலாப்பூரைச் சேர்ந்த ஆச்சாரமான ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தில் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் படித்தவர்கள்.  ஆனாலும் சச்சு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பியதால் அவரது வழக்கறிஞர் தந்தை அவருக்கு நடிக்க அனுமதி கொடுத்தார்.

நடிகை சச்சு ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.  அதன் பிறகு அவருக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

ரஜினி, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் 16 படம், மலையாளத்தில் 116 படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் அம்மா.. இவ்வளவு பெரிய நடிகையா?

kumari sachu1

மாயா பஜார், ராஜா தேசிங்கு, கலையரசி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் முதல் முதலாக நாயகியாக  நடித்த படம் வீரத்திருமகன்.  இந்த படத்தில் ஆனந்தன் மற்றும் சச்சு ஆகிய இருவரும் நாயகன், நாயகியாக நடித்திருந்தார்கள்.  ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடல் இன்று வரை பிரபலம் என்று கூறலாம்.

அவர் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்திருந்தார். இதே படத்தில் முத்துராமன் காஞ்சனா இன்னொரு ஜோடியாக நடித்திருந்தனர்.  இந்த இரண்டு ஜோடிகள் சேர்ந்து செய்யும் காமெடிகள் கலக்கலாக இருக்கும்.

பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பாமா விஜயம் திரைப்படத்தில் நடிகையாகவே நடித்திருப்பார். சிவாஜி கணேசனுடன்  ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம்  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் குணசத்திர நடிகையாகவும் சச்சு நடித்தார்.

சிவாஜி கணேசன் நடித்த சிவந்தமண் என்ற திரைப்படத்தில் இரவு விடுதியில் நடனமாடும் பெண்ணாக நடித்திருப்பார்.  அதில் அவர் ஆடும் வெஸ்டன் நடனம் மிகப்பெரிய அளவில் பாராட்டு பெற்றது.

எம்ஜிஆருடன் இவர் நடித்த மாட்டுக்கார வேலன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் அவர் சி.ஐ.டி வேடத்தில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்களை சுட்டு வீழ்த்தி எம்ஜிஆரை காப்பாற்றுவது போன்ற காட்சியில் நடிப்பதற்கு சச்சுக்கு வாய்ப்பு கிடைத்தது.

சிவாஜியுடன் நடித்து எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆசைப்பட்ட 5 நடிகைகள்!

இந்த படம் வெளியானபோது எங்கள் அண்ணன் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி  சொல்லி பொதுமக்கள் சிலர் அவர் காலில் விழுந்து நன்றி சொன்னதாகவும், அதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

kumari sachu2

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான தோழியாக இருந்தவர் சச்சு. தோழியாக இருந்தாலும் சச்சு தனக்கென எதுவும் முதல்வரிடம் கேட்டதில்லை. ஆனால் ஜெயலலிதாவே விரும்பி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் என்ற பதவியை கொடுத்தார். அந்த பதவியை ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு இணங்க சச்சு ஏற்றுக் கொண்டார்.

ரஜினி, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் 16 படம், மலையாளத்தில் 116 படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் அம்மா.. இவ்வளவு பெரிய நடிகையா?

70 வயதாகியும்  சச்சு சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜன்ட் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார்.