நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிவிட்டு படங்களில் நடித்து வந்ததால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் இந்த ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்
ஏற்கனவே ’மஹா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, இம்மாத இறுதியில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை இரண்டே மாதங்களில் அவர் முடிக்க திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதற்கு முன்னதாக அவர் ஒரு விளம்பரப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ராஜா வேடத்தில் அவர் நடித்து வரும் இந்த விளம்பர படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
சிம்பு மீண்டும் களம் இறங்கி ரசிகர்களை திருப்தி செய்ய முழுமனதுடன் முடிவு செய்துவிட்டார் என்பதையே இந்த புகைப்படங்கள் காட்டுவதாக அவர் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்