தங்க காசுகளை அள்ளிக்கொடுத்த கீர்த்தி சுரேஷ்… படப்பிடிப்பு தளத்தில் உருக்கம்!

Published:

நானியின் நடிப்பில் உருவாகி உள்ள தசரா படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தாறுமாறு வைரலானது. நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 30-ம் தேதி இந்திய அளவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர உள்ளது. படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பொதுவாக எந்தப் படம் ஹிட்டானாலும் தயாரிப்பாளர் குழுவில் உள்ள அனைவருக்கும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ‘தசரா’ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் ஸ்பெஷல் பரிசு கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

தசரா அணியைச் சேர்ந்த 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயத்தை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். தங்கம் விலைக்கு கீர்த்தி சுரேஷ் தனது படக்குழுவினருக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மறக்க முடியாத பரிசு வழங்க முடிவு செய்துள்ளார் கீர்த்தி. இந்த பான் இந்தியா திரைப்படத்தில் கீர்த்தி வெண்ணிலா என்ற கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...