ரஜினியின் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? மாஸ் அப்டேட் இதோ!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதை தொடர்ந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவரின் இசையில் கடந்த 6 ஆம் தேதி காவாலா பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எல்லாம் கலக்கி வருகிறது. மேலும் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இருந்து மீண்டும் ஒரு பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, யோகி பாபு, விநாயகன், சரவணன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் ஆன ஆடியோ வெளியீடு குறித்த தகவலுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

லியோ இரண்டாம் பாகம் உறுதி செய்த படக்குழு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தற்பொழுது ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயிலர் பட பாடல்கள் மற்றும் டிரெய்லரை ஜூலை 28 ஆம் தேதி ஒன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த விழாவில் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...