தேவ் 2019 ஆம் ஆண்டு 14 பிப்ரவரி 2019 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு திரையில் வெளியான திரைப்படமாகும்.
இந்தப் படமானது சாகசங்கள் மற்றும் காதல் இவை இரண்டையும் மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் ராசாத் ரவிசங்கர் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் கார்த்தி மற்றும் ரகுல் பிரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்து இருந்தனர் .
இந்தப் படம் முதலில் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் 10 ஜனவரி 2019 அன்று பொங்கல் அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் காலம் தாழ்த்தப்பட்டு, 14 ஆம் தேதி பிப்ரவரி 2019 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இந்தப் படமானது சாகசங்கள் செய்யும் ஒரு தமிழ் இளைஞனுக்கும், பிரான்சிஸ்கோவில் பணிபுரியும் ஒரு தொடக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மேக்னாவிற்கும் இடையேயான காதல் பற்றிய கதையாகும்.
தன் தந்தை செய்த தவறுகளால் ஆண்களை வெறுக்கும் மேக்னாவை கார்த்தி எப்படி காதலித்து கை சேர்கிறார் என்பதே மீதிக் கதையாகும். வலுவான திரைக்கதை இல்லாமல், வெறும் சாகசங்களை மட்டுமே கொண்டு படத்தினை வெற்றி அடையச் செய்ய முடியும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார் இயக்குனர்.