கோகுலத்தில் சீதை.. கார்த்திக் நடிக்க மாட்டேன்னு சொன்ன கதையா..? இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!

By Aadhi Devan

Published:

Gokulathil Seethai: 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். பலம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் தனது முதல் படத்திற்கு சிறந்த அறிமுக நாயகன் விருதை தமிழக அரசிடம் இருந்து பெற்றார்.

அதன் பிறகு நினைவெல்லாம் நித்யா, வாலிபமே வா வா, இளஞ்சோடிகள் என தொடர்ந்து பல படங்களில் கார்த்திக் நடித்துள்ளார். 1981 இல் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தேவ் படம் வரை 125க்கும் அதிகமான படங்களில் கார்த்திக் நடித்துள்ளார்.

என்னோட பட ஹீரோயினுக்கு என்ன குறைச்சல் : பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

இவரது நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் கோகுலத்தில் சீதை. இந்த படத்தில் கார்த்திக், கரண், சுவலட்சுமி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதோடு மணிவண்ணன் தலைவாசல் விஜய் பாண்டு உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

அகத்தியன் இயக்கிய இந்த படத்தின் கதையை கார்த்திக் முதலில் வேண்டாம் என மறுத்துள்ளார். இது பற்றி இயக்குனர் அகத்தியனின் நண்பர் இயக்குனர் தயா செந்தில் பகிர்ந்துள்ளார். முதலில் கார்த்திக் கோகுலத்தில் சீதை படத்தின் கதையை கூறிய போது கதை நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.

டப்பிங்கிற்கு வராமல் இழுத்தடித்த கார்த்திக்… தயாரிப்பாளரோட ஒரே போன்ல ஓடி வந்த நவரசநாயகன்…

ஆனால் அந்த கதை தனது வாழ்க்கைக்கு ஒத்துப் போவது போல் இருப்பதாகவும் ஆனால் இப்போது பிளேபாய் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை என்றும் மறுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு மீண்டும் ஒருமுறை அகத்தியன் கதை கூற சென்று வேறொரு கதையை கூறியுள்ளார்.

ஆனால் கார்த்திக் வேறு ஏதாவது கதை கூறுங்கள் என கேட்டுள்ளார். அப்போது யோசித்த அகத்தியன் மீண்டும் கோகுலத்தில் சீதை கதையை கார்த்திக்கிடம் கூறியுள்ளார். ஆனால் இந்த முறை நன்றாக யோசித்த கார்த்திக் நடிப்பதாக ஒப்புக்கொண்டதோடு இது என் கதை என்றும் கூறியுள்ளார்.

சினிமாவில் அறிமுகமான கார்த்திக்.. தந்தை முத்துராமன் என்ன செய்தார் தெரியுமா..?

அப்போது இயக்குனர் அகத்தியன் தான் இதற்கு முன்பும் இதே கதையை கூறி தாங்கள் நிராகரித்ததாக கூறியுள்ளார். அதற்கு கார்த்திக் இந்த கதையை வேண்டாம் என்று சொன்னேனா ஒருவேளை அது என் போதாத நேரமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். இந்த படம் கார்த்திக் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி படமாக திகழ்ந்தது. அதோடு இந்த படத்திற்கு தமிழ்நாடு அரசின் விருதும் கிடைத்தது.