என்னோட பட ஹீரோயினுக்கு என்ன குறைச்சல் : பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக இயக்கிய ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானதால் சரிவர ரசிகர்களைச் சென்று சேரவில்லை. எனினும் இந்த இருபடங்களிலுமே தனுஷ் மற்றும் விக்ரம் தங்களது முத்தான நடிப்பைப் பதிவு செய்திருந்தனர். மகான் படத்தில் துருவ் விக்ரமும் விக்ரமின் ரீல் மகனாகவும் நடித்திருந்தார். கடைசியில் மகனுக்காக போராடும் காட்சியில் விக்ரம் அபரிவிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இதன்பின் வெள்ளித்திரைக்கு கார்த்திக் சுப்புராஜ் எப்போது படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய ஜிகர்தண்டா xx வந்தது. ராகாவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்த இப்படம் தீபாவளி ரேஸில் ஜப்பானை பின்னுக்குத்  தள்ளி முதலிடம் பிடித்தது.

விமர்சன ரீதியாகவும் படம் வெற்றி பெற ஒவ்வொரு பிரபலங்களாக படத்தைப் பார்த்து ஆஹா, ஓஹோவென பதிவிட படம் கூடுதல் வெற்றி அடைந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் உங்கள் பட ஹீரோயின் அழகாக இல்லையே என்ற கேட்ட போது சற்று காட்டமான முகத்துடன் செய்தியாளர்களிடம் “முதலில் அவர் அழகாக இல்லை என்று நீங்கள் சொல்லியதே தவறு. உங்கள் கண்களுக்கு அப்படி தெரிகிறது என்று நான் நினைக்கிறன். ஒருத்தர் அழகா இருக்காங்க இல்லை என்று சொல்ல யாருக்குமே உரிமை கிடையாது.ஆனால், நீங்கள் இப்படி சொன்னது பெரிய வன்முறை” என்று பதலடி கொடுத்தார்.

செம நடிப்புன்னு சொல்ற மாதிரி எந்தப் படமும் இல்ல.. ஆனாலும் டாப் ஹீரோயினாக ரம்பா வலம் வந்த ரகசியம்

படத்தில் நிமிஷா சஜயன் ராகா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு நிகராக தனது நடிப்பில் அசத்தியிருப்பார். பலரும் அவருடைய நடிப்பைப் பாராட்டி வரும் வேளையில் செய்தியாளர் இவ்வாறு கேட்டதற்கும், அதற்கு கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த பதிலையும் பாராட்டி வருகின்றனர்.

நிமிஷா சஜயன் சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு பேசப்பட்டது. இவ்வாறு இவர் நடித்த இரு படங்களுமே விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருப்பதால் தமிழ் சினிமாவிற்கு அடுத்த தரமான ஹீரோயின் ரெடியாகி விட்டார் என கோலிவுட்டில பேச்சு அடிபடுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...