டப்பிங்கிற்கு வராமல் இழுத்தடித்த கார்த்திக்… தயாரிப்பாளரோட ஒரே போன்ல ஓடி வந்த நவரசநாயகன்…

கார்த்திக் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த கதாநாயகன். இவர் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனார் அறிமுகமானார். இப்படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்திருந்தார்.

இவர் மேலும் மெளனராகம், கிழக்கு வாசல், கோபுர வாசலிலே போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே உருவாக்கினார். பின் பிஸ்தா, சிஷ்யன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல வெற்றி திரைப்படங்களின் மூலம் இவர் மக்களால் கவரப்பட்டார்.

பொது மேடையில் எம்.ஜி.ஆரை பங்கமாய் கலாய்த்த நம்பியார்!.. அப்புறம் நடந்த தக் லைஃப் சம்பவம்தான் மாஸ்!..

இவருக்கு நவரச நாயகன் எனும் ஒரு பெயரும் உண்டு. அக்கால வாலிபர் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகரும் கூட. இவர் நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் சீனு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்திருந்தார்.

இப்படத்தினை இயக்குனர் பி.வாசு இயக்கியிருந்தார். இப்படத்தின் படபிடிப்புகள் நிறைவடைந்த பின் கார்த்திக் டப்பிங்கிற்கு வராமல் இழுத்தடித்தாராம். இயக்குனர் மற்றும் படக்குழுவினர் எவர் கூறியும் வரவில்லையாம். என்ன செய்வது என தெரியாமல் இருந்த இயக்குனர் இந்த விஷயத்தை தயாரிப்பாளரிடம் கூறினாராம்.

வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கேரக்டரில் நடித்தது யார் தெரியுமா?

உடனே தயாரிப்பாளர் கார்த்திக்கிடம் போனில் பேசினாராம். நான் உங்களை நம்பிதான் படம் தயாரித்தேன்… இன்று நீங்க செய்யும் இந்த செயல் எனது பெயரையே கெடுத்துவிடும். என மரியாதையை நீ காப்பாற்ற வேண்டும் என நினைத்தால் இதை செய்து கொடு.. என கூறினாராம்.

உடனே கார்த்திக் என்ன சார் இப்படியெல்லாம் பேசுறீங்க… நான் இன்னைக்கு நைட் 7 மணிக்கு கண்டிப்பாக வருகிறேன். ஆனால் நீங்க 6.45க்கு வீட்டிற்கு போயிடுங்க.. உங்கள் முகத்தை பார்க்க எனக்கு தைரியம் இல்லை என கூறினாராம். பின் சொன்ன நேரத்திற்கு வந்து காலை 4 மணி வரை இருந்து டப்பிங்கை  முடித்து கொடுத்துதான் சென்றாராம்.

குடும்பக் கதைகளின் நாயகன் விசு அப்படி என்ன மந்திரம் வச்சிருந்தாரு தெரியுமா?

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews