Karthi: அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் பருத்திவீரன். இந்த படத்தில் கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களையும் கவிஞர் சினேகன் தான் எழுதி இருந்தார்.
இந்தப் படம் பல நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை ஆரம்பத்தில் தயாரிக்க வந்த ஞானவேல் ராஜா இடையில் விட்டு விட்டதால் படத்தை எடுத்து முடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது அனைத்தையும் தாண்டி திரையரங்கில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
கைதி திரைப்படம்.. கார்த்தியே கால் பண்ணிட்டார்.. நரேன் பகிர்ந்த தகவல்..!!
இந்த படத்தின் மூலமாகத்தான் கார்த்தி திரை உலகில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தது மூலமாக கார்த்திக்கு சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம் பேர் விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது, விஜய் தொலைக்காட்சியின் சிறந்த அறிமுக நடிகர் விருது என மூன்று விருதுகள் கிடைத்தது.
வெளிநாட்டிற்கு சென்று எம்பிஏ படித்துவிட்டு நாடு திரும்பிய கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் துணை இயக்குனராக சேர்ந்தார். ஆனால் அவரை நடிகராக வேண்டும் என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இயக்குனராக இருந்தால் பெரிதாக சாதிக்க முடியாது என்று நினைத்து யார் மூலமாக திரைப்படத்தில் அறிமுகப்படுத்தலாம் என்று யோசித்துள்ளனர்.
எனக்கு முதலிலேயே தெரிஞ்சுருச்சு.. கையை உடைத்துக் கொண்ட கார்த்தி.. லிங்குசாமி பகிர்ந்த தகவல்..!!
பின்னர் அமீரை அழைத்து கார்த்தியை திரைப்படத்தில் அறிமுகப்படுத்துவதற்காக பேசியுள்ளனர். அப்போது அமீர் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்று விட்டால் நான் வேறு விதமாக நடந்து கொள்வேன். அங்கு சிவகுமாரின் மகன் என்று நான் பார்க்க மாட்டேன்.
ஜூனியர் ஆர்டிஸ்ட் பார்ப்பது போன்று தான் பார்ப்பேன். அப்புறம் மரியாதை குறைந்து விட்டது என்று சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு சிவகுமாரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை கார்த்தி அதெல்லாம் பார்க்க மாட்டான் என்று கூறியுள்ளார்.
ஒரு பாடலை பத்து நாள் எடுத்தார்.. அமீர் இப்படிதான் பண்ணுவார்.. அம்மா நடிகை சரண்யா பகிர்ந்த தகவல்..!!
அதன் பிறகு தான் பருத்திவீரன் படத்தில் கார்த்தி நடிகராக அறிமுகமானார். அதிலும் முதல் படம் என்பது அவருக்கு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. தென்மாவட்டத்தின் கொளுத்தும் வெயிலில் அமீர் அவரை நடிக்க வைத்துள்ளார்.