கைதி திரைப்படம்.. கார்த்தியே கால் பண்ணிட்டார்.. நரேன் பகிர்ந்த தகவல்..!!

Narain: கார்த்தி நடிப்பில் 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த நரேன் சக காவலர்களின் உயிரை காப்பாற்ற கைதியாக இருந்து விடுதலையான கார்த்தியின் உதவியை கேட்பார்.

முதலில் மறுத்த கார்த்தி அதன்பிறகு தனது மகளுக்காக ஒப்புக்கொள்வார். அப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போலீசார்களை லாரி ஒன்றில் அள்ளிக் கொண்டு செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகள், அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் படம். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி படமாக திகழ்ந்தது.

எனக்கு முதலிலேயே தெரிஞ்சுருச்சு.. கையை உடைத்துக் கொண்ட கார்த்தி.. லிங்குசாமி பகிர்ந்த தகவல்..!!

இதனிடையே இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கைதி 2 திரைப்படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கைது படத்தில் நடித்த நரேன் அந்த படத்தில் ஒப்பந்தமானது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

கார்த்தியிடம் கதையை கூறி ஓகே ஆன பிறகு காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்று கார்த்தி கேட்டுள்ளார். உடனே நரேனிடம் தான் பேச வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது கார்த்தி நீங்கள் பேச வேண்டாம் நானே பேசிக் கொள்கிறேன் என கூறிவிட்டாராம்.

முதல் படம்.. முதல் காட்சியிலேயே கொலை செய்யணும்.. தயங்கிய நெப்போலியன்.. பாரதிராஜா செய்த செயல்..!!

ஏனென்றால் போலீஸ் கதாபாத்திரம் என்றால் நரேன் தயங்குவார் என்பது கார்த்தியின் என்னமாக இருந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார். அப்படி கார்த்தி நரேனுக்கு கால் செய்து நாம் எதிர்பார்த்த மாதிரி வித்தியாசமான கதை ஒன்று வந்துள்ளது. ஒரு ஹீரோ என்று இல்லாமல் இரண்டு மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள் படத்தில் உள்ளது.

நான் ஒரு கதாபாத்திரம் பண்ணுகிறேன் இன்னொரு கதாபாத்திரம் உங்கள் பெயரை தான் இயக்குனர் கூறியிருக்கிறார் என்று கார்த்தி கூறியுள்ளார். அதோடு இதில் ஒரு சிறிய குழப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனே நரேன் புரிந்து கொண்டு போலீஸ் கதாபாத்திரமா என்று கேட்டுள்ளார்.

ஒரு சிறுகதையால் அதிகம் ஈர்க்கப்பட்டேன்.. அதுதான் இந்த படம்.. அகத்தியன் பகிர்ந்த தகவல்!

அதற்கு கார்த்தி ஆமாம் அதனால் தான் நானே உங்களிடம் பேசி விடலாம் என்று கால் செய்ததாக கூறியிருப்பார். ஆக போலீஸ் கதாபாத்திரம் என்றாலே மறுக்கும் நரேன் கார்த்தி கால் செய்ததால் கைதி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.