எனக்கு முதலிலேயே தெரிஞ்சுருச்சு.. கையை உடைத்துக் கொண்ட கார்த்தி.. லிங்குசாமி பகிர்ந்த தகவல்..!!

Lingusamy: கார்த்தி நடிப்பில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வெளியான திரைப்படம் பையா. இந்த படத்தில் தமன்னா, ஜெகன், சோனியா தீப்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லிங்குசாமி தான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் பெங்களூரில் இருந்து கதாநாயகியான தமன்னாவை கார்த்தி காரில் மும்பை வரை அழைத்துச் செல்வதும் மும்பையில் முன்பிருந்த பகையை எப்படி சமாளித்தார் தமன்னாவை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் கதை.

கார்த்திய முதல்ல இத செய்ய சொல்லுங்க… பொளந்து கட்டும் கஞ்சா கருப்பு…

இது கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக தான் அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக தான் அமைந்தது. இந்நிலையில் படத்தின் இயக்குனரான லிங்குசாமி படத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் துளி துளி துளி மழையாய் வந்தாலே என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்த பாடலில் கார்த்தி ஸ்கேட்டிங் பண்ணி கொண்டு மேலே ஏறி வருவது போன்று காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

பொங்கலுக்கு பின் சம்பவத்தில் இறங்கும் ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணி!

இது பற்றி தான் லிங்குசாமி பகிர்ந்துள்ளார் இந்த காட்சியை படமாக்க கார்த்தியின் பாதுகாப்புக்காக கயிறு கட்டிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது லிங்குசாமிக்கு ஏதோ தவறாக நடக்கப் போவது போன்று தோன்றியுள்ளது. உடனே சற்று யோசித்தவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று ஒரு அறையில் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு வந்துள்ளார்.

அவர் வரும்போது கார்த்தியை தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். என்ன ஆனது என்று கேட்டால் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட கயிறு அறுந்து கார்த்தி கீழே விழுந்து அவர் கை உடைந்து விட்டதாக கூறியுள்ளனர். அதிலும் அறுந்து போனது முக்கியமான பலமான கயிறு.

எமர்ஜென்சி எமர்ஜென்சி.. விமானத்தில் ஹன்சிகாவின் சேட்டை.. சிவகார்த்திகேயன் பகிர்ந்த வேடிக்கையான சம்பவம்..!!

இது எப்படி என்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்துள்ளது. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவது தனக்கு முதலிலேயே தோன்றியதாக லிங்குசாமி பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.