எம்.ஜி.ஆரை கடும் விமர்சனம் செய்த கண்ணதாசன்… அவரது பாட்டையே பதிலுக்கு பதிலாகக் கொடுத்த எம்.ஜி.ஆர்!

By John A

Published:

திரையுலகில் எம்.ஜி.ஆர் என்ற பெரும் இமயத்தை பகைத்துக் கொண்டவர்களை எம்.ஜி.ஆர் தனது வழிக்குக் கொண்டு வந்துவிடுவார் என்று அவர் மீது ஒரு கருத்து உண்டு. தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கதையை பார்க்க மாட்டார். பாடல்கள் மற்றும் சண்டை கட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ஆரம்பத்தில் பட்டுக்கோட்டையார் பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு பக்க பலமாக இருந்தது. அதன் பின் கண்ணதாசன் பாடல்கள் எம்.ஜி.ஆரை திரையுலகில் நிலை நிறுத்தியது. வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்கள் மக்கள் மத்தியில் அவரை கொண்டு சேர்த்தது.

இப்படி எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் கவிஞர்களின் பங்கு அதிகம். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று என்ன வென்றால் எம்.ஜி.ஆருக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு வருமாம். அனால் பின்னர் அவர்கள் சமாதானமாகி விடுவர். அப்படி ஒரு முறை இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வரவே கண்ணதாசன் கடுமையாக எம்.ஜி.ஆரை விமர்சித்திருக்கிறார்.

அந்த நேரம் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு லொகேஷன் பார்க்க வெளிநாடு சென்றிருக்கிறார். இந்த நேரத்தில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எம்.ஜி.ஆருக்காக உரிமை குரல் படத்தினை இயக்க ஆரம்பித்தார். அப்போது அவர் கண்ணதாசனிடம் இந்த படத்திற்காக 2 பாடல்களை எழுதி வாங்கியிருக்கிறார்.

பின்னர் எம்.ஜி.ஆர் வந்ததும் நம் படத்திற்கு கண்ணதாசனை பாடல்கள் எழுத வைக்கலாமா என்று இயக்குனர் ஸ்ரீதர் கேட்க, எம்.ஜி.ஆர் சிறு யோசனைக்குப்பின் ஓகே சொல்லி இருக்கிறார். அப்போது இயக்குனர் விழியே கதை எழுது.., ஆம்பளைகளா.. என்ற 2 பாடல்களையும் பதிவு சேட்டு எம்.ஜி.ஆருக்கு அனுப்ப அவரும் பிடித்துப்போய் ஓகே சொல்ல படம் தயாரானது. அப்போது கண்ணதாசன் மீண்டும் எம்.ஜி.ஆரை விமர்சிக்க, மக்கள் மத்தியில் அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது. மீண்டும் எம்.ஜி.ஆரிடம் பாடலை வைக்கலாமா அல்லது வாலியை பாடல் எழுத சொல்லலாமா என்று கேட்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உங்கள் விருப்பம் என்று கூற விநியோகஸ்தர்களிடம் படம் போட்டுக்காட்டப்பட்டது. அப்போது அவர்கள் படத்தினை ரிலீஸ்செய்யலாம் என்று கூற, அதன் பின் கண்ணதாசன் எழுதிய பாடல்களுடன் படம் வெளியானது.

மக்களும் இவர்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து திரையில் உரிமை குரல் படத்தை ரசித்தனர். படமும் வெற்றி பெற்றது. இப்படி தன்னை விமர்சனம் செய்தவருக்கும் மனதில் எதையும் வைக்காமல் பாடல் எழுத வைத்த வள்ளல்தான் மக்கள் திலகம்.