பராசக்தி, பாசமலர், திருவிளையாடல், சிவந்த மண் என நடிகர் திலகத்தின் எவர்கிரீன் 10 படங்களில் முக்கிய இடம்பெறும் படம்தான் பாகப் பிரிவினை. மாற்றுத் திறனாளியாக சிவாஜிகணேசன் இதில் தனது முத்திரையை பதித்திருப்பார். சிவாஜியுடன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, நம்பியார், பாலையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்த நிலையில், சிவாஜி பட நிறுவனம் படத்தை வெளியிட்டது.
பாகப்பிரிவினை படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் ஒரு வார்த்தை மாறியதால் பாடலின் மொத்தப் பொருளே மாற்றி இருந்தது. கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் இன்றும் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒருவருக்கு தன்னம்பிக்கை தருகிற பாடலாக அமைந்திருக்கும்.
ஒரு கை இயலா நிலையில் இருக்கும் சிவாஜி, தாழ்வு மனப்பான்மையால் இருந்து வரும் நிலையில், அவர் குடும்பத்தில் உள்ளவர்களே, அவரை ஏளனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பது தான் படத்தின் கதை. அதேபோல் இந்த படம் வெளியாகி அப்போதைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியில் ரீமேக் செய்ய முயற்சித்தபோது, சிவாஜியின் ஊனமுற்ற கேரக்டரில் நடிக்க இந்திய நடிகர்கள் தயங்கியதாகவும் கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு தமிழில் சிவாஜி கண்ணையா என்ற கேரக்டரில் வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம். அதேபோல் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் வரும் தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை உண்டோ என்ற பாடல் இன்றும் ஒரு சிறந்த மோட்டிவேஷன் பாடலாக உள்ளது. இந்த பாடலில் முதலில் தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் என்று தான் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
சரண் மேல் தீவிர நம்பிக்கை வைத்த அஜீத்.. கதையே கேட்காமல் நடித்த காதல் மன்னன்
ஆனால் அதன்பிறகு தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் என்று மாறியுள்ளது. குறைவிருந்தாலும் என்பதற்கான பொருள், தங்கம் 24 காரட், அல்லது 22 காரட் என்பதை குறிப்பது. குறை இருந்தால் என்பது ஒரு பவுனில் ஒரு கிராம் குறைந்தாலும் அது தங்கம் தான் என்பது பொருள். ஒரு வார்த்தையில் பாடலின் மொத்தப் பொருளையே மாற்றியுள்ளார் கண்ணதாசன்.