ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக கண்ணதாசனுக்கு மிகப்பெரிய புகழையும், பணத்தையும் பெற்றுத் தந்;த படம்னா அது மாலையிட்ட மங்கை. அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் டிஆர்.மகாலிங்கம்.
அந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எம்என்.ராஜத்தை ஒப்பந்தம் செய்து இருந்தார் கவிஞர் கண்ணதாசன். ஒருநாள் படப்பிடிப்புக்கு எம்என்.ராஜம் வரவில்லை. அவ்வளவு தான். உடனடியாக எம்என்.ராஜத்தை மாற்றி விட்டு அந்தக் கதாபாத்திரத்தில் மைனாவதியை நடிக்க வைத்தார் கண்ணதாசன்.
அந்தக் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் எடுத்த எல்லா முடிவுகளுமே இப்படித்தான் இருக்கும். அவருக்குக் கோபம் வந்ததுன்னா ‘தடால்’ என்று முடிவு எடுத்து விடுவார். மாலையிட்ட மங்கை படத்தின் போது இப்படி எல்லாம் சில பிரச்சனைகள் இருந்த போதும், அந்தப் படம் சுமூகமாக முடிந்து லாபம் கிடைத்ததுன்னா அதுக்கு முக்கியமான காரணம் 3 பேர்.
ஒண்ணு அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த டிஆர்.மகாலிங்கம். இன்னொன்னு அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த பண்டரிபாய். மூன்றாவது அந்தப் படத்தை இயக்கிய ஜிஆர்.நாதன். அவர்கள் மிகச்சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அதன் காரணமாகத் தான் குறுகிய நாள்களில் என்னால் எடுக்க முடிந்தது. மிகப்பெரிய லாபத்தையும் பெற முடிந்தது என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே பதிவு செய்துள்ளார் கவியரசர் கண்ணதாசன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


