’சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி என்ற சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா உள்பட பலர் நடித்து வரும் நிலையில் சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி என்ற படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது மீண்டும் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...