எச்.வினோத் கூட்டணியில் ராணுவ வீரனாக களமிறங்கும் கமல்!

Published:

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் மாஸ் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து இந்தியன் 2, பிக் பாஸ் சீசன் 7, பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் என அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கமல்.

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் தனது 234 ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக இருந்தது. கமல், மணிரத்தினம் இணையும் அந்தப் படத்துக்கான ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகளை தற்பொழுது படக்குழு தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கான லோகேஷன் தேடும் பணிகளில் மணிரத்தினம் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் கமலுடன் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ளதாகவும் ஹீரோயின் ஆக திரிஷா நடிக்க உள்ளதாகவும் முன்னதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்பொழுது மேலும் இரண்டு கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதாவது பீஸ்ட் புகழ் பூஜா ஹெக்டே மற்றும் கமலின் விருமாண்டி படத்தில் இணைந்து ஜோடியாக நடித்த அபிராமி இந்த இரண்டு நடிகைகளையும் இயக்குனர் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், இந்த படத்திற்கு முன்னதாக கமல் – ஹெச் வினோத்துடன் இணைந்து நடிக்கும் படத்தின் அப்டேட்களும் தற்பொழுது வெளியாக தொடங்கியுள்ளது. இந்த படம் நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு கதையாக இருக்கும் அல்லது விவசாயிகளின் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என முன்னதாக தகவல் வெளியாக இருந்த நிலையில் தற்பொழுது இந்த கதையில் பெரும் மாற்றத்தை கமல் மற்றும் எச் வினோத் கூட்டணி ஏற்படுத்தி உள்ளனர்.

விஜய்யின் லியோ படத்திற்க்கு சென்சார் குழு வைத்த ஆப்பு! அதிர்ச்சியில் லோகேஷ்!

இந்த படம் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை போன்று ஒரு ஒரு மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் நடிகர் கமல்ஹாசன் நீண்ட நாட்களுக்குப் பிறகு ராணுவ வீரனாக வீரனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் தான் கமல் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கமல் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த மாஸ் படங்களின் அப்டேட்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் உங்களுக்காக...