திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்த தமிழ் நடிகை ஒருவர் தனது ஆன்மீக குருவும் சாமியாருமான சுவாமி ரமா என்பவரின் அறிவுரையை ஏற்று 33வது வயதில் அவர் கைகாட்டிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர் தான் நடிகை மாதவி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்த மாதவி ஆந்திராவைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட நடன கலையை பயின்றவர்.
ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த நடிகை.. உச்சத்தில் புகழ்.. இன்று என்னவாக இருக்கிறார் தெரியுமா?
மேலும் ஏராளமான நடன நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தியுள்ளார். முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் இயக்குனர் தாசரி நாராயண ராவ் என்பவர் தான் மாதவியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அந்த படம் சுமாரான வரவேற்பு பெற்ற நிலையில் அவருக்கு தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வந்தது.

இந்த நிலையில் தான் அவர் தமிழில் 1980ஆம் ஆண்டு ‘புதிய தோரணங்கள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் சிவாஜி கணேசன் நடித்த ‘அமரகாவியம்’ திரைப்படத்தில் அருணா என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார். இருப்பினும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையான கேரக்டர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் கே.பாலச்சந்தரின் கண்ணில்பட்டு ‘தில்லுமுல்லு’ படத்தின் நாயகியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. அதன் பிறகு ரஜினிகாந்துடன் பல திரைப்படங்களில் நடித்தார். அவைகளில் முக்கியமானது ‘கர்ஜனை’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் நடித்தார்.

அதேபோல் கமல்ஹாசனுடன் ‘ராஜபார்வை’, ‘டிக் டிக் டிக்’, ‘காக்கிச்சட்டை’, ‘சட்டம்’, ‘மங்கம்மா சபதம்’ ஆகிய படங்களில் நடித்தார். மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த சில படங்களில் நடித்தார்.
தியேட்டர் ஆப்பரேட்டர் செய்த வேலை.. தலைகீழான ரிசல்ட்.. தமிழ் சினிமாவில் நடந்த ஒரே ஒரு புதுமை..!
தமிழ் நடிகை ஒருவர் 80களில் அதிக ஹிந்தி படங்களில் நடித்தார் என்றால் அது மாதவி மட்டும் தான். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஏக் துஜே கேலியே’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான அவர் அதன் பிறகு அமிதாப்பச்சன், கமல், ரஜினி நடித்த ‘அந்தா கானூன்’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். சுமார் 20 படங்களுக்கு மேல் அவர் ஹிந்தியில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தான் நடிகை மாதவி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். அவரது ஆன்மீக குரு ரமா என்பவரை அடிக்கடி அவர் சந்தித்து ஆசி பெற்று வந்தார். அப்போதுதான் சுவாமி ரமா ‘நீ திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
அப்போது அதே ஆசிரமத்திற்கு ரெகுலராக வருகை தந்து கொண்டிருந்த மருந்து தயாரிக்கும் தொழிலதிபர் ரால்ப் சர்மா என்பவரை அறிமுகப்படுத்தினார். நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் இல்லற வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று சுவாமி ரமா அறிவுரை செய்ததை அடுத்து சில மாதங்கள் ரால்ப் சர்மாவுடன் மாதவி பழகினார்.
இருவரது மனமும் ஒத்து போனதை எடுத்து கடந்த 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சுவாமி ரமா ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நடிகை மாதவி தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது கணவர் மற்றும் மகள்களுடன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் வாழ்ந்து வருகிறார்.
அட்டர் பிளாப் ஆன படத்தை மீண்டும் எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட்டாக்கிய விசு.. என்ன படம் தெரியுமா?
நடிகை மாதவி தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகள்களின் புகைப்படங்களை பதிவு செய்வார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
