கமலின் இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்! அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா?

By Velmurugan

Published:

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். லைகா புரொடெக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி,நடிகர் விவேக், மலையாள நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தியன் படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசை அமைப்பதாக தகவல் வெளியானது.

இந்தியன் 2 படமானது இந்தியன் படத்தின் பகுதி 1 முடிந்த இடத்திலிருந்து தொடங்குகிறது. அதாவது கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் சுமார் 90 வயது உடையதாக இருக்கும் என்றும் இந்த மேக்கப் போட்டு கொள்ள ஏறக்குறைய 4 மணிநேரமும், சேனாபதியின் தோற்றத்தை அகற்ற 2 மணிநேரமும் கமல் செலவிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் கமல் அவர்கள் இயக்குனர் ஷங்கர் இந்தியன் படத்திற்காக செய்து வரும் வேலையை பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டு கடந்த ஜூன் மாதத்தில் அவரை பாராட்டும் விதமாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை பரிசாக வழங்கினார்.

நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வரும் சமந்தா! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?

அதை தொடர்ந்து “இந்தியன் 2′ படத்தின் முக்கிய காட்சிகளை இன்று பார்த்துள்ளார் கமல். அதில் இயக்குநர் சங்கரின் திறமையும் மீண்டும் பாராட்டி சில வார்த்தைகளை பதிவிட்டு அன்புள்ள கமல்ஹாசன் என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்தியன் 2 இல் ஷங்கர் உண்மையில் தன்னை மிஞ்சிவிட்டார் என்றும் படத்தின் பகுதிகளைப் பார்த்து முடிவில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கமல் கூறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த அப்டேடாக இந்தியன் 2 படத்தின் அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமையை ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட் ஃபிளிக்ஸ் 200 கோடி ரூபாய்க்கு வாங்கிய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.