நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வரும் சமந்தா! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?

தென்னிந்திய திரையுலகின் கியூட் ஹீரோயினாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் தெலுங்கு படங்களில் முதலில் நடிக்கத் தொடங்கி அதை தொடர்ந்து தமிழில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக விஜய், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ’யசோதா’, ‘சாகுந்தலம்’ போன்ற திரைப்படங்களின் கலவையான விமர்சனத்தை தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மையோசிடிஸ் என்ற நோயால் கடும் அவதிபடும் சமந்தா தீவிர சிகிச்சை பெற்ற வேண்டும் என்பதற்காக குஷி படத்தில் நடித்த பிறகு சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samantha Ruth Prabhu shared posts on Instagram.

அதை தொடர்ந்து சமந்தா எந்த படங்களிலும் கமிட் ஆகாமல், தற்போது சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

Samantha is in Bali.

 

விஜய்யின் ‘நா ரெடி’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்!

சமந்தா அடுத்தபடியாக தற்பொழுது வெளிநாடு சென்றுள்ளார். இந்தோனேஷியாவில் சமந்தா தனது தோழி அனுஷா ஸ்வாமியுடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

இந்தோனேசியாவின் பாலிதீவுவில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படத்தில் அவரது காலை உணவு, அழகான இயற்கை காட்சிகள் என பல இடம் பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...