திரையுலகில் 64 ஆண்டுகள்.. கமல்ஹாசனின் முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ ஒரு காப்பி படமா?

By Bala Siva

Published:

உலக நாயகன் கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 64 ஆண்டுகள் ஆகின்றன. 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் அறிமுகமான நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன் கிட்டதட்ட 50 சதவீதம் காரணம் என்றும் அன்றைய விமர்சனங்கள் கூறின.

இந்த படம் ஒரு சீன படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காப்பி என்றும் கூறப்படுவதுண்டு. ‘நோபடீஸ் சைல்ட்’ என்ற ஹாங்காங்கில் தயாரான சீனப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம்தான் தமிழில் களத்தூர் கண்ணம்மா என மாறி உள்ளது.

எஸ்பி முத்துராமன் தான் இயக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா.. டான்ஸ் மாஸ்டராக கமல்ஹாசன்.. என்ன படம் தெரியுமா?

ஏற்கனவே இதே கதையை வைத்து ‘கடவுளின் குழந்தை’ என்ற படமும் வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

kalathur kannamma3

‘நோபடீஸ் சைல்ட்’ என்ற படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான ஜோஸ்பின் சியாவ் என்பவர் 11 வயது சிறுமியாக நடித்திருந்தார். சீனாவில் போர் நடக்கும் போது பெற்றோரை விட்டு பிரிந்து அனாதையாக செல்லும் குழந்தை அதன்பின் தனது பெற்றோரை தேடி கண்டுபிடிக்கும் கதைதான் இந்த படம்.

அதேபோல் கமல்ஹாசன் அனாதை இல்லத்தில் விடப்பட்ட நிலையில் அவர் எப்படி தான் பெற்றோருடன் இணைந்தார் என்பது தான் களத்தூர் கண்ணம்மா கதையாக இருந்தது.

தமிழ் திரை உலகில் எப்படி கமல்ஹாசன் மிகப்பெரிய நடிகராக இருக்கிறாரோ அதேபோல் சீனாவில் ஜோஸ்பின் சியாவ் இன்றும் மிகப்பெரிய நடிகையாக உள்ளார்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

இந்த படத்தின் கதை என்று பார்த்தால் ஜமீன்தார் வீட்டு மகனான ஜெமினி கணேசன் ரயிலில் செல்லும்போது ஏழைப் பெண் கண்ணம்மாவை பார்த்து காதல் கொள்வார். ஆனால் அவரது அப்பா அந்தஸ்தை காரணம் காட்டி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதை அறிந்து கோவிலில் கண்ணம்மாவிற்கு தாலி கட்டி குடும்பம் நடத்துவார்.

kalathur kannamma1

அப்போதுதான் மேல் படிப்பிற்காக அவர் வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில் கண்ணம்மா கர்ப்பமாகி குழந்தை பெற்ற நிலையில் கண்ணம்மாவின் அப்பா தனது மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டு அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் அனாதை இல்லத்தில் விட்டு விடுவார்.

அனாதை இல்லத்தில் வளரும் குழந்தை தனது அப்பாவையும், அம்மாவையும் தேடி கண்டுபிடித்து இணைந்ததா என்பதுதான் மீதிக்கதை. இந்த படத்தில் ஜெமினி கணேசன் ஜமீன்தாரின் மகனாகவும், டி.எஸ்.பாலையா ஜமீன்தாராகவும், ஏழைப் பெண் கண்ணம்மாவாக சாவித்திரியும் நடித்திருந்தனர். மூவருமே இந்த படத்தில் நடிப்பில் அசத்தி இருந்தனர்.

இந்த படத்தின் விமர்சனம் வெளியானபோது குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்த சிறுவன் தமிழ் திரை உலகில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அன்றே கல்கி கணித்து விமர்சனம் எழுதியிருந்தது.

kalathur kannamma

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

இந்த படம் கடந்த 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு ஆர்.சுதர்சனம் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. ‘கண்களின் வார்த்தைகள்’, ‘ஆடாத மனமும்’, ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ ஆகிய பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது. மொத்தத்தில் கமல்ஹாசன் தற்போது தனது 64வது ஆண்டு திரையுலக வாழ்வை கொண்டாடி வரும் நிலையில் அவரது முதல் படத்தை ஞாபகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.