எஸ்பி முத்துராமன் தான் இயக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா.. டான்ஸ் மாஸ்டராக கமல்ஹாசன்.. என்ன படம் தெரியுமா?

எஸ்.பி.முத்துராமன்தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று ஜெயலலிதாவே விரும்பி ஒரு படத்தை இயக்க அனுமதித்தார் என்றால் அந்த படம் தான் அன்பு தங்கை.

சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த எங்க மாமா என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக எஸ்.பி.முத்துராமன் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அவரது திறமையான பணிகளை பார்த்த ஜெயலலிதா அன்பு தங்கை என்ற படத்தில் நடிக்க வாய்ப்புக்கு கிடைத்தபோது இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினால்தான் சரியாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் கூற அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?

அன்பு தங்கை படத்திற்கு முன்பாக எஸ்.பி.முத்துராமன் ‘கனி முத்து பாப்பா’, ‘காசி யாத்திரை’, ‘எங்கம்மா சபதம்’ உள்பட  ஒரு சில படங்களை இயக்கி இருந்தார். இதனை அடுத்து அவர் இயக்கிய படம் தான் அன்பு தங்கை. இந்த படம் 1974ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.

anbu thangai

முத்துராமன், ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ், ஸ்ரீகாந்த்,  தங்கவேலு, சுருளிராஜன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்த படம் உருவானது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த கமல்ஹாசன் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராகவும் பணிபுரிந்து இருப்பார்.

இந்த படத்தின் கதை என்று பார்த்தால் முத்துராமன் ஒரு மிகப்பெரிய கவிஞர், அவரது கவிதைக்கு தமிழகமே அடிமையாக இருக்கிறது. அவரது கவிதை தொகுப்பு புத்தகம் வெளியாகும் போதெல்லாம் வாசகர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்குவார்கள். ஆனால் இவ்வளவு புகழோடு இருந்தவர் பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் தனது கவிதை தொகுப்பு உரிமையை தனது நண்பர் ஸ்ரீகாந்துக்கு கொடுத்திருந்தார்.

முத்துராமின் கவிதை தொகுப்பை விற்று ஸ்ரீகாந்த் மிகப்பெரிய பணக்காரர் ஆகிவிடுவார். இதனை அடுத்து முத்துராமன் தனது தங்கை ஜெயலலிதாவை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்து கொடுப்பார். அதன் பிறகு ஸ்ரீகாந்த்துக்கு ஏற்படும் சந்தேகம், குழப்பம், சூழ்ச்சி ஆகியவை காரணமாக ஜெயலலிதா புகுந்த வீட்டில் கஷ்டப்படுவார். அப்போது மனம் வருந்தும் முத்துராமன் தனது தங்கையின் வாழ்வை சீரமைக்க எடுக்கும் நடவடிக்கைகள் தான் இந்த படத்தின் அடுத்தடுத்த காட்சிகள்.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

பாசமலர் படத்திற்கு பிறகு ஒரு மிகச்சிறந்த அண்ணன் தங்கை கதையாக இந்த படம் போற்றப்பட்டது. இந்த படத்தில் ஜெயலலிதாவின் பாடல் ஒன்றுக்கு கமல்ஹாசன் தான் நடன இயக்குனராக பணிபுரிந்தார். அது மட்டுமின்றி ஒரு சின்ன கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருப்பார்.

Anbu Thangai1

இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களுமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் எஸ்.பி.முத்துராமன் அளித்த பேட்டியில்கூட தன்னை ஒரு இயக்குனராக மதித்து ஜெயலலிதா அம்மையார் அவர்களே இந்த படத்தை நான்தான் இயக்க வேண்டும் என்று கூறியது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் அன்பு தங்கை படத்தை இயக்கிய பிறகுதான் சினிமா உலகில் தனக்கொரு நிரந்தரமான இடம் கிடைத்தது என்றும் கூறியிருப்பார்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

முழுக்க முழுக்க அண்ணன் தங்கை சென்டிமென்ட் கதை அம்சம் கொண்ட இந்த  படத்திற்கு ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...