ரஜினி வசனத்தை கமலை பேச வைத்த சந்தானம்!.. அட இந்த விஷயம் செம சூப்பரா இருக்கேப்பா!..

Published:

நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்க தொடங்கிய நிலையில் , நடிகர் சந்தானமும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சந்தானத்தின் அடுத்த படத்திற்கான டைட்டில் வெளியாகியுள்ளது.

சந்தானத்தின் அடுத்த படம்:

நடிகர் சந்தானம் தொலைக்காட்சி காமெடி நடிகனாக தொடங்கி, லொள்ளு சபா மூலம் பிரபலமானார். நடிகர் சிலம்பரசன் மன்மதன் படத்தில் நண்பனாக நடிக்க வாய்ப்பினை அளித்தார். அதை தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், அறை என் 305 இல் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றார். மேலும், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் அவரது காமெடி பெரிய அளவில் பாரட்டுகளை பெற்றது.

கோலிவுட்டில் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின்பு காமெடியனாக எந்த படத்திலும் நடிப்பதே இல்லை. தற்போது படங்களை தயாரிக்கவும் தொடங்கிவிட்டார். திரைப்பட தயாரிப்பாளராக தொடங்கியதும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்து நடித்திருந்தார். சந்தானம் ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, டகால்டி, 80ஸ் பில்டப், டிடி ரிட்டன்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை ஏற்படுத்திக் கொண்டார்.

ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட உலக நாயகன்:

சந்தானம் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் எந்த படமும் சரியாக ஓடவில்லை. கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக பெரும் வரவெற்பினை பெற்றது. கார்த்திக் யோகி இயக்கிய இப்படத்தில் மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்தர், ஜான் விஜய், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சந்தானம் நகைச்சுவை நடிகராக இருக்கும் போது அவர் இல்லாத படமே ரீலிஸாவாத அளவிற்கு பீக்கில் இருந்தார். அவர் நேரத்திற்கேற்ப அடிக்கும் கவுண்ட்டர்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது , சில நேரம் அவை சர்சையை கூட ஏற்படுத்தியிருக்கிறது.
அதை தொடர்ந்து சந்தானம் தற்போது திடீரென அவரது அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் பெயரையும் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் சந்தானத்தை நான்கு பேர் துக்கிய படி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். மேலும் படத்திற்கு ”இங்க நான் தான் கிங்கு” என்ற பெயரையும் அறிவித்துள்ளனர். இப்படத்தை ஆனந்த் நாராயணன் இயக்க உள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

“இங்க நான் தான் கிங்கு” என்கிற வசனத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் பேசியிருப்பார். அந்த வசனத்தையே டைட்டிலாக கொண்ட போஸ்டரை கமல் வெளியிட்டுள்ளார்.

மேலும் உங்களுக்காக...