நிறைவேறாமல் போன கமலஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா காதல்! வைரலாகும் வீடியோக்கள்!

Published:

இந்திய திரை உலகின் பிரபலம் மற்றும் முன்னணி நடிகரான கமலஹாசன் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தை தொடர்ந்து தற்பொழுது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். சமீபத்தில் கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் தனது 233 வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் கமலஹாசன் நடிப்பை தொடர்ந்து சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் சமூக வலைதளங்களில் கமலஹாசன் அவ்வப்பொழுது ட்ரெண்டிங் ஆவது வழக்கமாக மாறி உள்ளது. கமலஹாசனின் உடை மற்றும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் பொழுது அவர் கூறும் பஞ்ச் டயலாக்குகள் என சில நிகழ்வுகள் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன் நடிகர் கமலஹாசன் சின்னத்திரை தொலைக்காட்சியான விஜய் டிவியில் காபி வித் டிடி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகை ஸ்ரீவித்யா குறித்து கூறிய தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியின் போது தொகுப்பாளனி டிடி நடிகர் கமலஹாசனிடம் கேள்வி கேட்பது வழக்கம். அதற்காக நடிகர் கமல் மற்றும் ஸ்ரீவித்யா இணைந்து நடித்த திரைப்படங்களின் புகைப்படங்களை வெளியிட்டு இந்த திரைப்படங்கள் குறித்த அனுபவங்களை கூறும்படி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் கமலஹாசன் இந்த படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு 19 வயது. நான் திறமையாளன் என்று எனக்கு உணர்த்தியவர்கள் ஸ்ரீவித்யா என மிக பெருமையாக கூறியிருப்பார். இதை கேட்ட டிடி அன்பு தோழியா என கமலிடம் கேள்வி கேட்டிருப்பார். அதற்கு நடிகர் கமலஹாசன் வெளிப்படையாக தோழி எல்லாம் கிடையாது அன்பு காதலி என உண்மையை உடைத்திருப்பார்.

தம்பி விஜய் படத்தை போடுங்க என ஷாக் கொடுத்த தல அஜித்! அப்படி என்ன நடந்திருக்கும்?

அதேபோல நடிகை ஸ்ரீவித்யாவும் ஒரு பேட்டியில் கமலஹாசன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது நானும் நடிகர் கமலும் காதலித்தது ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரிக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் எங்கள் இருவரின் வீட்டிற்கும் தெரியும். ஒரு நாள் ஸ்ரீவித்யாவின் அம்மா நடிகர் கமலை தன் வீட்டிற்கு வரவழைத்து உங்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது என சில அறிவுரைகளை கூறியுள்ளார். அதன் பின் நடிகர் கமல் இருக்கு மிகுந்து கோபம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து நடிகை ஸ்ரீவித்யாவிடம் அவர் பேசவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் திடீரென நடிகர் கமல்ஹாசனுக்கு திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியானது அதை பார்த்து நடிகை ஸ்ரீவித்யா நான் கமலை இழந்து விட்டேன் என மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் கூறியிருந்தார். நடிகை ஸ்ரீவித்யாவும் கமல்ஹாசனும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளனர் அப்பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஸ்ரீவித்யாவை பிரிந்தவுடன் நடிகர் கமலஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் நடிகர் கமலஹாசனை பிரிந்த ஸ்ரீவித்யாவால் அந்த காதல் பிரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை. அதன் பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜார்ஜ் என்பவரை மதம் மாறி திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீவித்யா.

குடும்ப வாழ்க்கையை மிகவும் விரும்பிய ஸ்ரீவித்யா கணவனின் கட்டாயத்தின் பேரில் படங்களில் நடித்து வந்துள்ளார். அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டுள்ளனர். அதன் பின் நடிகை ஸ்ரீவித்யாவிற்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் இருந்த ஸ்ரீவித்யா காலமானார். அந்த நேரத்திலும் இறுதியாக நடிகர் கமலஹாசனை ஸ்ரீவித்யா பார்த்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...