தம்பி விஜய் படத்தை போடுங்க என ஷாக் கொடுத்த தல அஜித்! அப்படி என்ன நடந்திருக்கும்?

தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய் மற்றும் அஜித் முன்னணி நடிகர்களாகவும் போட்டி நடிகர்களாகவும் மாறி உள்ளனர். இந்த இரண்டு முன்னணி ஹீரோக்களும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர். அதேபோல தங்களது ஆரம்ப காலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடி வந்துள்ளனர். தளபதி விஜய்யின் தொடக்க காலத்தில் எப்படி உருவ கேலிக்கு ஆளானாரோ அதேபோல் அஜித்தும் ஒழுங்காக நடனமாடத் தெரியவில்லை, சோக காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, சண்டைக்காட்சிகள் வரவில்லை என பல விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் தற்பொழுது இந்த இரண்டு முன்னணி நடிகர்களும் சினிமாவில் பிடித்துள்ள இடம் சாதாரண இடம் இல்லை. அவர்களின் அயராத உழைப்பு மற்றும் திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையின் உச்சம்.

90களில் நடிக்க வந்த அஜித் மற்றும் விஜய் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்குப் பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை. இவர்கள் இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சி செய்யவில்லை என்றாலும் இந்த இரண்டு ஹீரோக்களும் தங்களது பாதையில் கடினமாக உழைத்து மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளனர். அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தாலும் அதே நேரத்தில் வசூல் ரீதியாக சில போட்டிகளும் அவ்வப்பொழுது நடப்பது வழக்கம் தான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். சினிமா சார்ந்த போட்டி எல்லாம் விட்டுவிட்டு தனிப்பட்ட முறையில் நண்பர்களாகவே பழகி வருகின்றனர்.

ஒரு வருடத்தில் மட்டும் 18 ஹிட் படங்களை கொடுத்த விஜயகாந்த்! என்னென்ன படங்கள் தெரியுமா?

இதற்கு உதாரணமாக அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்தை பார்த்து தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கூப்பிட்டு இருந்தால் நானே நடுத்திருப்பேன் என கூறியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு மேடையில் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் மங்காத்தா திரைப்படம் மற்றும் தளபதி விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் ஒரே இடத்தில் நடந்த பொழுது தளபதி விஜய் மற்றும் அஜித், வெங்கட் பிரபு மூன்று பேரும் ஒன்றாக இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். அதை அடுத்து தளபதி விஜய் நடிகர் அஜித்திற்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதற்கு பதிலாக தல அஜித் தளபதி விஜய்க்கு பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார். இதன் மூலமாக இருவரும் நட்பாக பழகி வருகின்றனர் என்பது உறுதியாகி உள்ளது.

இதை அடுத்து மங்காத்தா திரைப்படத்தின் ஒரு தியேட்டர் காட்சி அமைந்திருக்கும், அதில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அப்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு திரையில் உங்கள் படத்தை போடலாமா என கேட்டுள்ளார். அதற்கு அஜித் வேண்டாம் என கூறி என்னுடைய ஒரு படத்தை இன்னொரு படத்தின் இடையில் வைப்பது முறையாக இருக்காது. அதற்கு பதிலாக தம்பி விஜய்யின் திரைப்படத்தை வைக்கலாம் என முழு மனதுடன் கூறியுள்ளார். அதை எடுத்து காவலன் படத்தின் காட்சிகள் ஒரு சீனில் இடம்பெற்றிருக்கும். அதை போல் வேலாயுதம் படத்தில் விளையாட்டு மங்காத்தா பாடல் பேக்ரவுண்டில் ஓடிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.