ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்! வாயை பிளக்கும் ரசிகர்கள்!

Published:

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஒரு புதிய காரை பரிசாக கொடுத்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது. ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சன் பிச்சர்ஸ் படத்தை தயாரித்தது.

இந்த படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இதற்கு முன்னாதாக ஜெய்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் பேச்சு அதிக அளவு மக்களால் கவனிக்கப்பட்டது.

குறிப்பாக கலாநிதிமாறன் ரஜினிகாந்த் குறித்தும், அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் விழா மேடைகளில் பேசியது சமூக வலைத்தளங்களில் பல நாள் டிரெண்டிங்கில் கலக்கியது. கலாநிதிமாறன் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கூறியது, ரஜினியின் 72வது வயதிலும் அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ரஜினியின் வீட்டின் முன் காத்து வருகின்றனர். இந்த வயதிலும் பல தயாரிப்பாளர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும் நடிகர்கள் தான் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து யோசிக்க வேண்டும் என்ற கருத்தை கலாநிதிமாறன் முன்வைத்தார்.

இதனை அடுத்து ஜெயிலர் படமும் வெளியானது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரஜினி தனது இமையமலை பயணத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். ரஜினி எப்பவும் ஒரு படம் நடித்த பின் இமையமலை பயணம் செல்லுவது வழக்கம்.கொரோனா காலகட்டம் காரணமாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இமயமலைக்கு போகாமல் இருந்ததால் இப்போது ஜெயிலர் படம் ரிலீசுக்கு முன்பே அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இரண்டு கார்களை நிறுத்தி அவரை கூப்பிட்டு வர மாதிரி வீடியோ தான் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் இரண்டு கார் அவர் நிறுத்தி அதில் உங்களுக்கு பிடித்த காரை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார்.

படம் ஓடினால் மன்னன், இல்லை என்றால் நாடோடி! கடன் வாங்கி படம் எடுத்த எம்.ஜி.ஆர்!

அப்போது ரஜினி பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் காரை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த காரின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய். மேலும், உலகளவில் 550 கோடிக்கு மேல் வசூலித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வரை தியேட்டர்களில் வசூலை அள்ளி குவித்து வருகிறது என்பதால் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய சன் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் கலாநிதி மாறன் லாபத்தில் ஒரு பங்கு பரிசாக வழங்கினார் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு விலை உயர்ந்த காரை வழங்கியது குறிப்பிட்டதக்கது. அதுபோல மாமன்னன் படத்தின் வெற்றிக்கு உதயநிதி அந்த படத்தினுடைய டைரக்டர் மாரி செல்வராஜ்க்கு காரை பரிசளித்துள்ளார்.

 

மேலும் உங்களுக்காக...