படம் ஓடினால் மன்னன், இல்லை என்றால் நாடோடி! கடன் வாங்கி படம் எடுத்த எம்.ஜி.ஆர்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து இயக்கிய நாடோடி மன்னன் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல். அந்தப் படம் உருவாக காரணமாக இருந்தது சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படம் தான் என சில ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 1940 ஆம் ஆண்டு மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்து பி யு சின்னப்பா இரண்டு வருடங்கள் நடித்த உத்தமபுத்திரன் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு வீனஸ் பிக்சர் நிறுவனம் உத்தமபுத்திரன் திரைப்படத்தை மீண்டும் தயாரிக்க விரும்பியது.

அந்த படத்தில் டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி, பத்மினி, நம்பியார், தங்கவேலு நடிப்பதாக இருந்தது. இதற்கான உரிமத்தை மாடன் தியேட்டர் நிறுவனத்திடம் இருந்து வீனஸ் பிக்சர் நிறுவனம் பெற்று இருந்தது. இதே நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் உத்தமபுத்திரன் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார்.

ஆனால் இது பி.யு சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் கதை கிடையாது, அந்த நேரத்தில் ஒருநாள் பத்திரிகையில் எம்ஜிஆர் இரண்டு வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன் என்றும், சிவாஜி 2 வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன் என்றும் விளம்பரம் வந்தது. இது எம்ஜிஆர்க்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியது.

உடனே நான் நடிக்கும் உத்தமபுத்திரன் படத்தை ட்ராப் பண்ணுங்க என்றும், நான் இரண்டு வேடங்களில் நடிக்கும் வேறொரு கதையை தயார் செய்யுமாறு ஆர்.என் வீரப்பா தலைமையிலான கதை குழுவிற்கு எம்.ஜி.ஆர் உத்தரவிட்டிருந்தார். எம்ஜிஆரின் இந்த திடீர் உத்தரவை நிறைவேற்ற முடியாமல் கதைக் குழு தவித்தது. அப்பொழுது எம்ஜிஆர் தான் பார்த்தேன் இப் ஐ வெர் ய கிங் படத்தை கதையை ஒன்லைனாக வைத்து திரை கதையை அமைக்கும் படி கூறினார். இந்த ஆங்கில படம் எம்ஜிஆர் மனதில் விதையாக விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அந்த கதை தான் நாடோடி மன்னன் பாடமாக உருவானது.

மேலும் நாடோடி மன்னன் திரைக்கதை உருவாக்கத்தின் போது கதைக் குழுவிடம் ரொனால்டோன்மேன் நடித்த மற்றொரு திரைப்படங்களை பார்த்து திரைக்கதை அமைக்குமாறு கூறியுள்ளார். இந்த படத்தில் பானுமதி மற்றும் சரோஜாதேவி கதாநாயகிகள், பி எஸ் வீரப்பா மற்றும் எமன் நம்பியார் வில்லனாக நடித்துள்ளனர்.

இந்த படத்தை முதலில் டைரக்டர் ராம்நாத் இயக்குவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் திடீரென ராம்நாத் இறந்துவிட்டதால் எம்ஜிஆர் தான் இயக்குனர் உருவெடுத்தார். எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம் இதுதான்.

மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், தாய்க்கு பின் தாரம் என அடுத்தது வெற்றிப் படிகளில் ஏறி புகலின் உச்சியில் இருந்து எம்ஜிஆர் நடிப்பதற்காக பல்வேறு பட வாய்ப்புகள் காத்திருந்தன. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தன்னுடைய முழு கவனத்தையும் நாடோடி மன்னன் படம் இயக்குவதில் திருப்பினார் எம்ஜிஆர்.

எம் ஜி ஆர் நாடோடி மன்னன் படத்திற்காக பெரும் தொகையை செலவிட்டார். சில நேரங்களில் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். காட்சிகளின் பிரம்மாண்டத்துக்காக மட்டுமில்லாமல் படத்தில் பணியாற்றக் கூடிய நடிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தாராளமாக சம்பளம் வழங்கப்பட்டு, படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற்காக படப்பிடிப்பு தளத்தில் போது மினி ஓட்டலையை எம்ஜிஆர் ஏற்பாடு செய்தார்.

மேலும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கன்னித்தீவு போய் நடக்கக்கூடிய காட்சிகள் மட்டும் வண்ணப் படமாக எடுக்கப்பட்டது.படத்தின் செலவு அதிகமாக போனதால் படப்பிடிப்பு முடிந்த பிறகு வெளியிட சிரமப்பட்ட எம்.ஜி.ஆர், ஏ வி எம் நிறுவனத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று வெளியிட்டார்.

இரண்டு நாளோ.. மூன்று நாளோ.. ஓடினால் போதும்.. இறுதியில் கமல் – ரஜினிக்கு செம டஃப் கொடுத்த டி. ராஜேந்திரன்!

படம் முடிந்த பிறகு வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பை பொருத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நான் நாடோடி என சர்வ சாதாரணமாக எம் ஜி ஆர் கூறியுள்ளார். மக்கள் எம் ஜி ஆரை மன்னன் ஆக்கினார்கள். 1958ல் வெளியான நாடோடி மன்னன் அமோக வெற்றி பெற்றது. அதுவரை வெளியான படங்களை விட வசூல் புரட்டி போட்டது.

மதுரையில பல லட்ச மக்கள் முன்னிலையில் நடந்த வெற்றி விழாவை தொடர்ந்து சென்னையில் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் நிஜமாவே முடி சூடியதற்கு காரணமாக இருந்தது நாடோடி மன்னன். 48 ஆண்டுகளுக்கு பிறகு 2006ல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாடோடி மன்னன் மீண்டும் வெளியிடப்பட்டது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...