25 வருடங்களுக்கு முன்பே ஒரு புரட்சிக்கதை.. தன்னை தானே செதுக்கிய பாலசந்தரின் கல்கி!

By Bala Siva

Published:

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் திரைப்படம் என்றாலே புரட்சிகரமான கதை அம்சம் இருக்கும். அதேபோல் வலிமையான பெண் கேரக்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அவள் ஒரு தொடர்கதை கவிதாவிலிருந்து சிந்துபைரவியின் சிந்து வரை அவர் படைத்த பெண் கேரக்டர்கள் எல்லாமே வித்தியாசமாகவும் புரட்சிகரமாகவும் இருக்கும்.

அவ்வாறு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ஒரு புரட்சிகரமான கேரக்டர் உள்ள திரைப்படம் தான் கல்கி. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகை ஸ்ருதி என்பவர் தான் கல்கி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் ஒரு சிலையை போன்ற வடிவத்தில் தான் கல்கி கேரக்டர் இருக்கும்.

kalki3

இயல்பாக சிந்திப்பது, சரி என்று தோன்றினால் அதை உறுதியாக நிறைவேற்றுவது, புதுமையான சிந்தனை மற்றும் தைரியம், கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல மனம் சம்பந்தப்பட்டது என்ற பல குணங்களைக் கொண்டவள் தான் இந்த கல்கி. இந்த படத்தின் கதைப்படி பிரகாஷ் ராஜ் முதலில் கீதாவை திருமணம் செய்து கொள்வார்.

ஆனால் அவருக்கு குழந்தை பிறக்காததால் அந்த குறையை மனதில் வைத்து அவர் ரேணுகாவை திருமணம் செய்வார். இருவரையுமே அவர் ஆணாதிக்கம் செலுத்தி கொடுமைப்படுத்துவார். இரண்டு மனைவிகளை கஷ்ட படுத்தும் பிரகாஷ்ராஜுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக கல்கி, பிரகாஷ்ராஜை காதலிப்பார்.

பிரகாஷ் ராஜூம் அவரை காதலிப்பார். இந்த நிலையில் கல்கி கர்ப்பமாகிவிடுவார். இந்த நிலையில் கல்கியை இன்னொரு பக்கம் ரகுமான் ஒருதலையாக காதலிப்பார். கர்ப்பமான கல்கி கர்ப்ப நேரத்தில் பிரகாஷ்ராஜை பாடாய் படுத்துவார்.

இறந்த பின் பேரறிஞர் அண்ணாவை நடிக்க வைத்த கே.பாலசந்தர்.. விவாகரத்தான கணவன் – மனைவி கதை..!

kalki2

அப்போது ஒவ்வொரு முறையும் தன்னுடைய இரண்டு மனைவிகளை எப்படி கொடுமைப்படுத்தினோமோ அதே போல் கல்கி தன்னை கொடுமைப்படுத்துவதை பிரகாஷ்ராஜ் நினைத்து கொள்வார். இந்த நிலையில் குழந்தையை பெற்றெடுக்கும் கல்கி, அந்த குழந்தையை கீதாவிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை காதலித்த ரகுமானுடன் இணைந்துவிடுவார்.

சமூகம் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளாத ஒரு புரட்சிகரமான கதையைத்தான் பாலச்சந்தர் படமாக இயக்கி இருந்தார். முற்போக்கு சிந்தனைகள் குறைவாக இருந்த காலத்தில், சமூக கட்டுப்பாடுகள் அவசியம் என்று இருந்த நேரத்தில் தான் இந்த படம் வந்தது. இந்த படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஊடகங்களில் இந்த படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், பாலச்சந்தரின் வசனம் மற்றும் மேக்கிங்கிற்கு பாராட்டு கிடைத்தது.

ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்.. 30 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் லாபம்..!

kalki1

தனிமனித சுதந்திரம் என்பது தேவைதான். ஆனால் இப்படி ஒரு சுதந்திரம் பெண்களுக்கு தேவையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பெண்மையின் அறிவையும் தூய்மையும் பேசும் கேரக்டர் தான் கல்கி என்று விமர்சனங்களுக்கு பாலசந்தர் விளக்கம் அளித்திருந்தார். இந்த படம் கடந்த 1996 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியானது.

பிரகாஷ் ராஜ், ரகுமான் ஆகியோர்களுடன் ஸ்ருதி, கீதா, ரேணுகா, பாத்திமா பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற எட்டு பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிகர் விவேக்.. புது முயற்சியில் இயக்குனர் சங்கர்..!

இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகை விருது ஸ்ருதிக்கு கிடைத்தது. அதேபோல் சிறந்த வில்லன் விருது பிரகாஷ்ராஜுக்கு கிடைத்தது.   இந்த படத்திற்கு பிறகு ஸ்ருதி தமிழில் நடிக்கவில்லை என்றாலும் கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.