வெற்றி பயணத்தை தொடங்கியது ஆதித்யா எல்1.. எத்தனை மாத பயணம்? என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?

Published:

நிலவினை ஆய்வு செய்ய சமீபத்தில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 என்ற விண்கலத்தை செலுத்திய நிலையில் அந்த விண்கலம் தற்போது நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து அடுத்த கட்டமாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி சி 57 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 11.50 மணிக்கு சரியாக விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் திட்டமிட்டபடி சரியான பாதையில் விண்கலம் சென்று கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

aditya L1ab

சந்திரயான்-3 குறித்து இஸ்ரோ தலைவர் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

சூரியனின் வெளிப்புற பகுதியை தான் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய உள்ளது.  இந்த விண்கலம் சூரியனிலிருந்து எல்1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமியில் மனிதர்கள் உள்பட உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானதாக சூரியன் உள்ளது. அப்படிப்பட்ட சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ திட்டமிட்டு கடந்த பல மாதங்களாக விண்கலம் தயார் செய்து உள்ளது. இந்த விண்கலம் பூமியின் நீள் வட்ட பாதையை சென்றடைந்து விண்வெளியிலே அதற்கு உந்துவிசை கொடுக்கப்பட்டு எல்1 புள்ளியை நோக்கி தள்ளப்படும் என்று தெரிகிறது.

இந்த விண்கலம் 4 மாதங்கள் பயணம் செய்யும். சூரியனின் எல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 3.78 பில்லியன் ரூபாய் செலவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

aditya L1a

ஸ்ட்ராபெரி நிறத்தில் காட்சியளித்த நிலா! என்ன காரணம் தெரியுமா?

சூரியனை இந்த விண்கலம் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் கிரகணங்களின் போது சூரியனை நிலவு மறைத்தாலும் ஆதித்யா எல்1 விண்கலத்தின் கண்களில் இருந்து தப்ப முடியாது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சூரியனின் முழு செயல்பாடுகளை ஆதித்யா எல்1 ஆய்வு செய்ய முடியும். .

சூரியனில் உள்ள கொரோனா அடுக்கு என்பது அலைகள் நிறைந்ததாக இருக்கும். சூரியனின் அதீத வெப்பத்தின் வெளிப்பாடாக உள்ள இந்த பகுதி, பிளாஸ்மா எனப்படும் மெல்லிய அடுக்கு ஆகியவற்றையும் இந்த கருவிகள் ஆய்வு செய்யும்.

aditya L1

திக் திக் நிமிடங்கள்.. நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்த சந்திராயன் 3. இந்தியா சாதனை..!

மேலும் சூரியப்புயல், சூரியனின் செயல்பாடுகள், பூமியிலும் அதன் அருகே இருக்கும் விண்வெளியிலும் ஏற்படும் தாக்கம், ஆகியவற்றையும் இந்த விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள முடியும். சூரியனின் கதிர்வீச்சு, அதிலிருந்து வெளிப்படும் துகள்கள், காந்த புலன்களின் ஓட்டம், விண்வெளிகள் என்ன தாக்கம் செய்கின்றன என்பதை ஆதித்யா எல்1 மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...