நடிகர் ஜீவா, விஜய் மற்றும் அவரது கிரிக்கெட் திறன் குறித்து தெரிவித்த சில விஷயங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் ஜீவா திரைப்படங்களில் கொஞ்சம் பிஸியாக நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் மிக ஜாலியாக அனைவருடனும் பழகக் கூடியவர்.
படப்பிடிப்பு என்பதை தாண்டி பொது இடங்களில் அவர் ஜாலியாக பேசும் பல வீடியோக்கள் அதிகம் வைரல் ஆவதை நாம் கவனித்திருப்போம். அந்த வகையில் சமீபத்தில் விஜய் பற்றி அவர் பேசிய வீடியோவும் அதிகம் வைரலாகி வருகிறது. ஜீவாவும் விஜய்யும் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் 3 இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். ஹிந்தியை போலவே தமிழிலும் மிகப்பெரிய அளவில் இந்த திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரின் காம்போவும் அதிகம் ஒர்க் அவுட்டாகி இருந்தது. அதிலும் மற்ற இருவரையும் விட ஜீவா தான் ஒரு படி மேலே போய் காமெடி காட்சிகளில் அதகளம் செய்திருப்பார்.
நண்பன் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் கூட BTS காட்சிகளில் ஜீவா மிக வேடிக்கையாக செயல்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றிருந்தது. நிஜத்திலும் மிக வேடிக்கையான நபராக இருக்கும் ஜீவா நடிகர் விஜய்யின் கிரிக்கெட் திறன் குறித்து சில தகவல்களை ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி நபர் ஒருவர் ஜீவாவிடம், ‘நண்பன் படத்தின் போது நீங்களும் விஜய்யும் சேர்ந்து கிரிக்கெட் ஆடி இருக்கிறீர்களா?’ என்ற கேள்வியை முன்வைக்கிறார். இதற்கு பதில் சொல்லும் ஜீவா, “நடிகர் விஜய்க்கு அந்த அளவுக்கு கிரிக்கெட் பற்றி தெரியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பாசிடராக விஜய் இருந்த போது நானும் அவருடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு பந்து பவுண்டரி லைனைக் கடந்த போது அது சிக்ஸா அல்லது ஃபோரா என எதுவும் தெரியாமல் வெளிப்படையாக கேட்டிருந்தார். அப்போது நான் அவரிடம் ‘அண்ணா, நீங்க தான் இந்த ஐபிஎல் தொடரின் பிராண்ட் அம்பாசிடர்’ என வேடிக்கையாக கேட்டேன். இதனால் விஜய்க்கு கிரிக்கெட் அறிவு குறைவாக தான் இருந்தது. ஆனால் அவரது மகன் சஞ்சய் நன்றாக கிரிக்கெட் ஆடுவார்.
இருந்தும் CCL தொடருக்காக அவரை அழைத்த போது உடனடியாக மைதானத்தில் வந்து கலந்து கொண்டார்” என ஜீவா கூறி உள்ளார்.