தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவரது தந்தை மோகன் தமிழ் சினிமாவில் எடிட்டராக பணியாற்றினார் மற்றும் இவரது சகோதரர் ராஜா இயக்குனர் ஆவார். 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை தயாரிப்பில் சகோதரர் இயக்கத்தில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவி.
முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து அதிக ரசிகர்களை பெற்றார். அடுத்ததாக கமர்சியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஜெயம் ரவி. பேராண்மை தனி ஒருவன் நிமிர்ந்து நில் பூலோகம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் ஜெயம் ரவி. அதற்கு பிறகு தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்ததாக ஏழு படங்களில் நடிப்பதற்காக கையொப்பம் இட்டு இருக்கிறார் ஜெயம் ரவி.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு பெரிதாக பேசப்படவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்காக ஜெயம் ரவி சில கோடிகளை தன் கையில் இருந்து அள்ளிக் கொடுத்திருக்கிறாராம்.
Brother திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டதாம். டிஸ்டிபியூட்டர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்ததாம். இதனால் ஜெயம் ரவி முன்வந்து இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்காக நான்கு கோடி ரூபாய் வரை தன் கையில் இருந்து கொடுத்திருக்கிறார். ஆனாலும் படம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெறாததால் இவ்வளவு கோடியை அள்ளிக் கொடுத்தும் பிரயோஜனம் இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் ஜெயம் ரவி.