பிக் பாஸ் 8: ஜெஃப்ரிக்கு இந்த போட்டியாளரை முன்னாடியே தெரியுமா.. யாருங்க அது.. வியந்த ரசிகர்கள்..

By Ajith V

Published:

Jeffrey in Bigg Boss 8 : பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருந்தனர். இதில் பலரும் விஜய் டிவிக்கு பிரபலமான தொடர்களில் நடிகர்களாகவோ அல்லது வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாகவோ இருந்து வந்தவர்கள். இதனால் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இவர் இருக்கும் சூழலில், ஜெஃப்ரி என்ற ஒரே ஒரு இளைஞர் மட்டும் அதிகம் பழக்கம் இல்லாதவர்.

இவர் பாடல்கள் எழுதி அதை உருவாக்கி வரும் நிலையில் ஓரளவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருபவர். இதனால் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த போதும் முற்றிலும் ஒரு புதிய போட்டியாளராக தான் பார்க்கப்பட்டிருந்தார். ஜெஃப்ரி போன்ற ஒருவர் பிக் பாஸ் வீட்டில் சாதிக்க வேண்டும் என்றால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பதை தாண்டி தனது விளையாட்டையும் நேர்த்தியாக விளையாட வேண்டும்.

அப்படி ஒரு ஆட்டத்தை தான் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவர் பிக் பாஸ் வீட்டில் வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதற்கிடையே சமீபத்தில் ரேங்கிங் டாஸ்க் அனைவரும் ஜெப்ரியை பார்த்து சிரிக்க அதற்கு பளீரென அவர் கொடுத்த பதிலடி அனைவரையும் சைலன்ட் ஆக்கி இருந்தது.

சிரித்த அனைத்து வாயும் தனது கேள்வியால் அடைத்து போக வைத்த ஜெப்ரியிடம் பலரும் மன்னிப்பும் கேட்டிருந்தனர். அதே போல தர்ஷா குப்தா ஆண்கள் அணியில் இருந்து செய்த தவறை மற்ற எந்த ஆண்களும் சுட்டிக்காட்டாமல் இருக்க, நேரடியாக அவரிடமே கேள்வி கேட்டு அசர வைத்திருந்தார் ஜெஃப்ரி. இதனால் இந்த சீசனின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவர் என்றும் பலர் ஜெப்ரியை பாராட்டி வருகின்றனர்.

ஆனால் இவருக்கு ஏற்கனவே இந்த பிக் பாஸில் இருக்கும் ஒருவருக்கு தெரிந்தவர் என் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மகாராஜா படத்தில் நடித்ததுடன் இந்த சீசனில் இளம் போட்டியாளரான நடிகை சாச்சனா, ஜெஃப்ரி அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நாம் அனைவரும் தொடர்பில் இருப்போமா என அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்க, இதற்கு பதில் சொல்லும் சாச்சனா, “நான் எப்படியும் ஜெப்ரியுன் டச்சில் இருப்பேன். அவர் எனக்கு தெரிந்த ஒரு ஆன்ட்டியின் பையன் தான். ஒரே ஏரியாவில் தான் நாங்கள் வசிக்கிறோம்” என்று கூற இந்த தகவல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.