இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம்தான் ‘வந்தாளே மகராசி’. இந்த படத்தில் ஒரு ஜெயலலிதாவின் கேரக்டர் சோ ராமசாமிக்கும் இன்னொரு ஜெயலலிதா கேரக்டர் ஜெய்சங்கருக்கும் ஜோடியாக நடித்திருப்பார்கள். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
கிட்டத்தட்ட ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ரீமேக் போல் இருக்கும் இந்த படம் பெண்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. கிராமத்தில் உள்ள ஒரு அப்பாவி பெண் லட்சுமி, அவரது அப்பாவித்தனத்தை பார்த்த பக்கத்து வீட்டு கொடூரமான பெண் தனது குடும்பத்தை சேர்ந்த சோவுக்கு திருமணம் செய்து வைப்பார். சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த திருமணம் நடக்கும்.
எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?
திருமணத்திற்கு பின்னர் சோ மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் இணையாமல் கொடுமைப்படுத்துவார். அவரை வீட்டில் வேலைக்காரி போல் நடத்துவார். இந்த நிலையில் தான் அந்த ஊருக்கு ஒரு டாக்டர் வருவார், அவர் ஜெயலலிதா கொடுமைப்படுவதை பார்த்து வருத்தப்படுவார். ஆனால் அவரால் ஒன்றுமே செய்ய முடியாது.
இந்த நிலையில்தான் டாக்டர், ஒரு நாள் சென்னைக்கு செல்லும்போது அங்கு இன்னொரு ஜெயலலிதாவை பார்ப்பார். அவர் வீரமாகவும் விவேகமாகவும் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்து அவரிடம் போய் உங்களை போலவே இருக்கும் ஒருவர் கிராமத்தில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார், அவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைப்பார். அவரும் அவருடைய தந்தையும் ஒப்புக் கொள்வார்கள். அதன்பின் ஒருநாள் ஆள்மாறாட்டம் நடக்கும்.
அதுவரை பயந்தாங்கொல்லியாக கோழையாக இருந்த ஜெயலலிதா திடீரென அதகளப்படுத்துவார். அதை பார்த்து அவருடைய மாமியாரும், கணவரும் அதிர்ச்சி அடைவார்கள். அந்த குடும்பத்தையே ஆட்டி வைத்து அப்பாவி ஜெயலலிதாவையும் சோவையும் ஒற்றுமையாக சேர்த்து வைத்து விட்டு அதன் பின் அவர் மீண்டும் சென்னை வந்து விடுவார். சென்னை வரும் ஜெயலலிதாவுக்கு ஜெய்சங்கர் ஜோடியாவதுடன் படம் சுபமாக முடியும்.
டாக்டராக ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் ராணி ஆகிய இரண்டு கேரக்டரில் ஜெயலலிதா, அப்பாவி ஜெயலலிதாவின் ஜோடியாக சோ ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக இருக்கும். இந்த படம் கடந்த 1973ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில் உருவான இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதி இருந்தார். அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தில் ஜெயலலிதா, டி.எம்.சௌந்தரராஜன் உடன் இணைந்து ‘கண்களில் ஆயிரம்’ என்ற பாடலை பாடியிருக்கிறார். முதல் முதலாக சோவுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த இந்த படம் கிட்டத்தட்ட எங்க வீட்டுப் பிள்ளை படத்தை ரீமேக் செய்தது போல் இருந்தாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வாக பேசப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா இந்த படத்தில் நடிக்க கூடாது.. கண்டிஷன் போட்ட எழுத்தாளர்.. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’..!
இன்று கூட தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பினால் பெண்கள் படம் முழுவதையும் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இந்த படம் பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. ஜெயலலிதாவுக்கு அடிமைப்பெண் ஒரு திருப்புமுனை என்றால் ‘வந்தாளே மகராசி’ திரைப்படம் இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது.