‘குணா’ படத்தில் இப்படி ஒரு சண்டையா ?.. இதனால்தான் கமலுடன் ஜனகராஜ் அடுத்து நடிக்கவே இல்லையா?

By Staff

Published:

ஒரு கதை படமாகும் பட்சத்தில் அந்த படத்திற்கு பின்னாடி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அப்படி ஒரு படம் தான் கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படம்.

1991 ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் தேதி வெளியான இந்த குணா திரைப்படம் அந்த நேரத்தில் விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரிய அலையை ஏற்படுத்தியது. அதே வேளையில் மக்களிடம் இந்த படம் நல்ல முறையில் சென்றடையுமா என்ற கேள்வியும் எழுந்தது.

ஏனெனில் இந்த படம் வரும் வரை ஒரு மாஸ் ஹீரோ என்றால் அவனுக்கு என ஒரு தனி சட்டகம் உண்டு. தீமைகளுக்கு எதிரானவன். யாராலும் அவனை வெல்ல முடியாதவன். இப்படி ஹீரோவுக்கு என ஒரு தனி பாலிசி இருந்தது .அதற்கு நேர் மறையாக அமைந்தது தான் இந்த குணா திரைப்படம்.

அதனால்தான் இந்த படம் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற ஒரு அச்சம் இருந்தது. இந்த நிலையில் குணா திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றி ஜனகராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த படம் வரையிலுமே ஜனகராஜ் கமலும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் குணா படத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேரவில்லை என்பதுதான் உண்மை. இதற்கான காரணம் என்ன? குணா படத்தில் ஏதேனும் சண்டை நடந்ததா? என ஜனகராஜ் இடம் நிருபர் ஒருவர் கேட்க ,

சண்டை என்று இல்லை. இயக்குனரை பொறுத்த வரைக்கும் தப்பு செய்தால் ஒன் மோர் கேட்கலாம். செய்யாத பட்சத்தில் எதுக்கு ஒன் மோர் கேட்க வேண்டும்? அப்படி ஒரு சம்பவம் தான் நடந்தது. டப்பிங் பேசும்போது ஏகப்பட்ட ஒன் மோர் கேட்டார் இயக்குனர். அதனால்தான் பிரச்சனையே எழுந்தது.

இதுதான் குணா படத்தில் நடந்தது என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதன் மூலம் எழுந்த பிரச்சினை தான் அடுத்தடுத்து கமலுக்கும் ஜனகராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட அதிலிருந்து கமல் உடன் இணையவே இல்லையாம் ஜனகராஜ்.