ஜெயிலர் படத்தின் தெறிக்க விடும் வெற்றியை தொடர்ந்து சம்பள விசயத்தில் கரார் காட்டும் ரஜினி!

Published:

தென்னிந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தனது 72வது வயதிலும் திரை உலகில் அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வருகிறார். ரஜினியை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்களும், ரஜினிக்கு கதை சொல்ல பல முன்னணி இயக்குனர்களும் வரிசை கட்டி நிற்கும் அளவிற்கு ரஜினியின் ஸ்டைலுக்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் வெளியாகி பட்டையை கிளப்பியது. கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் இதுவரை 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மல்டி ஸ்டார் படமாக உருவாகிய ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் அமைந்த ஒவ்வொரு பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் வைரலாக பரவியது. தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலு இயக்கத்தில் தனது 170 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் அமிதாப் பச்சன், பாகுபலி வில்லன் ராணா, துசாரா விஜயன் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என உறுதியான தகவல் சமீபத்தில் வைரலானது. மேலும் இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த எந்த உறுதியான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது லோகேஷ் இயக்கி வரும் தளபதி விஜய்யின் லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தலைவர் 171வது படம் குறித்த அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து மாஸ் ஹிட் படங்களை கொடுக்க தயாராகி வரும் ரஜினி சமீபத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே மாதம் வெளியான நிலையில் அந்தப் படத்தில் நடிகர் ரஜினி மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது முழுமையாக முடிவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்க தயாராக உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சலாம் படத்தில் ரஜினி கேமியோவாக நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த மாஸான அப்டேட் கிடைத்துள்ளது.

முதலில் இந்த படத்தில் நடிக்க நடிகர் ரஜினி எந்தவித சம்பளத்தையும் குறிப்பிட்டு கேட்கவில்லை, மேலும் படத்தின் வெற்றியை பொறுத்து அதில் ஒரு பங்கை தனக்கு வழங்குமாறு மட்டுமே கூறியிருந்தார். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் பட்ஜெட்டை 25 கோடியிலிருந்து 50 கோடி ஆக மாற்றும் அளவிற்கு செலவுகளை உயர்த்தியுள்ளார்.

பாலிவுட்டில் வெற்றி பெற்ற முதல் தமிழ் நடிகை.. வைஜெயந்திமாலாவின் வெற்றிப்பயணம்..!!

இந்நிலையில் தான் மகளின் படத்தில் சம்பளம் இல்லாமல் நடிப்பது முறையாக இருக்காது என நினைத்த ரஜினிகாந்த் லாம் சவால் படத்திற்காக லைகா நிறுவனத்திடம் 40 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சமீபத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 80 கோடி, இருப்பினும் மூன்று நாள் கால்ஷீட்டில் நடித்த படத்திற்காக ரஜினி பாதி சம்பளமாக 40 கோடி வாங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...