வடிவேலு சார் நடிச்ச ஒரு சீனை நான் நடிக்க 5 நாள் ஆச்சு… நடிகர் கவின் புகழாரம்…

Published:

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று சாதித்த நடிகர்களுள் ஒருவர் கவின். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் ஆவார். ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த நடிகர் கவின் தனது நண்பர்கள் மூலமாக திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்த நடிகர் கவின் விஜய் டிவியின் பிரபல தொடரான ‘கனா காணும் காலங்கள், ஒரு கல்லூரியின் கதை’ என்ற தொடரில் அறிமுகமானார். முதல் தொடரிலேயே அனைவரின் கவனத்தையும் இளம் வயது ரசிகர்களையும் பெற்ற நடிகர் கவின், விஜய் டிவியின் அடுத்தடுத்த தொடர்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

விஜய் டிவியின் ‘தாயுமானவன்’, ‘சரவணன் மீனாட்சி’ ஆகிய தொடர்களில் நடித்தார். இதில் சரவணன் மீனாட்சி தொடர் மிகப் பிரபலமாக ஓடியது. அதில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் நடிகர் கவின். இதன் வாயிலாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

2017 ஆம் ஆண்டு ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகர் கவின். பின்னர் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் இறுதிவரைவிளையாடி பிரபலமானார் நடிகர் கவின். அதற்கு பின்னரே சினிமாவில் ஏறுமுகத்தை கண்டார் கவின்.

2021 ஆம் ஆண்டு ‘லிப்ட்’ 2023 ஆம் ஆண்டு ‘டாடா’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் இவர் நடித்த டாடா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி அடைந்தது. அதற்குப் பிறகு சமீபத்தில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படமும் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடி தந்தது. சினிமாவில் பொறுமையாக அடி எடுத்து வைத்து வரும் கவின் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினால் முன்னேற முடியும் என்று உணர்த்தி இருக்கிறார். தற்போது அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார் கவின்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவின் வடிவேலு அவர்களை பற்றியும் அவரின் நடிப்பை பற்றியும் புகழ்ந்து பேசி உள்ளார். அவர் கூறியது என்னவென்றால், மாமன்னன் திரைப்படத்தில் ஒரு சீன்ல வடிவேலு சார் அழுவாரு அதாவது ஒரு சம்பவம் நடக்கும் அந்த சம்பவத்தை நினைத்து நமக்கு ரொம்ப கோவம் வரும் ஆனா நம்ம எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைமையில் இருப்போம் அந்த சூழ்நிலையை நினைத்து அந்த வலிய தன் முகத்தில் அப்படி காமிச்சு செமையா நடிச்சிருப்பாரு வடிவேலு சார். அந்த மாதிரி ஒரு சீன்ல நடிக்கறதுக்கு எனக்கு அஞ்சு நாள் ஆச்சு என்று வடிவேலுவை புகழ்ந்து பேசி உள்ளார் கவின்.

மேலும் உங்களுக்காக...