GV பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் சகோதரியின் மகன் ஆவார். 2005 ஆம் ஆண்டு வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் GV பிரகாஷ் குமார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன போன்ற பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் GV பிரகாஷ். இது மட்டுமல்லாமல் இவரது மனைவி சைந்தவி ஒரு பாடகியாவார். அவருடன் இணைந்து இவர் பல ரொமான்டிக் பாடல்களை பாடியிருக்கிறார். அந்த பாடல்கள் முழுவதும் ஹிட் ஆகியும் இருக்கிறது.
இசையமைப்பதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் GV பிரகாஷ். தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், செம்ம, குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை, நாச்சியார் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு GV பிரகாஷ் தனது மனைவி சைந்தவி உடதான உறவை முறித்துக் கொள்வதாகவும் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து விட்டதாகவும் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த பாச்சுலர் திரைப்படத்தில் நடிகை திவ்ய பாரதி இவருடன் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார். அதனால் திவ்யபாரதியால் தான் இவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டது என்று பேசி வந்தனர். அதற்கு ஜிவி பிரகாஷ் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.
GV பிரகாஷ் கூறியது என்னவென்றால் நானும் என் மனைவியும் பிரிந்ததற்கு திவ்யபாரதி தான் காரணம் என்று கூறுகிறார்கள். நாங்கள் இருவரும் டேட் செய்கிறோம் என்று கூறுகிறார்கள். அப்படி எதுவுமே கிடையாது. அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். நாங்கள் சூட்டிங் நேரத்தில் தவிர மற்ற நேரத்தில் சந்தித்தது கூட கிடையாது என்று ஓபனாக மனம் திறந்து பேசி இருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.