அம்மு அபிராமி இந்தப் பிரபலத்தை காதலிக்கிறாரா… குழப்பத்தில் இணையவாசிகள்…

Published:

அபிராமி ஐயங்கார் என்ற இயற்பெயரைக் கொண்ட அம்மு அபிராமி 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ படத்திலும் 2019 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக JFW- பெண்களுக்கான விருதுகள் மேடையில் சிறந்த துணை நடிகை என்ற விருதைப் பெற்றார்.

பின்னர் 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப் ஆக வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினர் அம்மு அபிராமி. அவருக்கு ஸ்பெஷல் கேப்ஷன் போட்டு குக் வித் கோமாளியின் இயக்குனர் பார்திவ் மணி இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் குணா திரைப்படத்தில் வரும் ‘அபிராமி அபிராமி’ பாடலை வைத்து எடிட் செய்ததுடன் ‘ஹாப்பி பேசஸ் கேதர்டு டுகெதர் செலிபிரேட் தி ஸ்வீடஸ்ட் சோல். ஹாப்பி அபிராமி டே. பி ஹாப்பி எப்போவும்’. என்று கேப்ஷன் போட்டிருந்தார்.

அதற்குப் பதிலாக அம்மு அபிராமி ‘தேங்க்யூ பா பார் எவ்ரிதிங்’ என்று பதில் அளித்திருந்தார். மேலும் ரித்திகா ‘ஆஹா’ என்றும் சிவாங்கி ‘ஆவ்வ்’ என்றும் குரேஷி உங்கள் ஹேர்ஸ்டைல்க்கு காரணமே அபிராமி தான என்றும் கமெண்ட் செய்திருந்தனர். இதனால் அம்மு அபிராமியும் குக் வித் கோமாளியின் இயக்குனருமான பார்திவ் மணியும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதைப் பற்றி அம்மு அபிராமி எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

மேலும் உங்களுக்காக...