
பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் வருமான வரி சோதனை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.25 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் கூறுகின்றது
கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். விஜய்யின் அடுத்த படத்தில் இவர் தான் நாயகி என்று கூறப்படுகிறது

இந்த நிலைஇல் ராஷ்மிகா மந்தனாவின் வீட்டில் நேற்று திடீரென வருமான வரி அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தபோது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.