நடிகர் அஜீத் பிரேம புத்தகம் தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால் தமிழில் 1993-ல் செல்வா இயக்கிய அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். இப்படத்திற்கு பாலபாரதி இசையமைத்திருந்தார். முதல் படத்திலேயே தனது முத்திரையைப் பதித்த அஜீத் இப்படத்தின் பாடல்களால் பிரபலமானார். முதலில் ஆசை நாயகன் என்ற பட்டத்தை ரசிகர்கள் அவருக்கு வழங்கினர்.
இதனையடுத்து அவர் நடித்த அடுத்த படமான பவித்ரா படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இப்படத்தின் பாடல்களும் வரவேற்பைப் பெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த அஜீத் தேவாவுடன் பல படங்களில் கைகோர்த்தார். இவ்விருவர் காம்போவும் இணைந்த படங்கள் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தது. ஆனால் இசைஞானி இளையராஜா இசையில் மட்டும் அஜீத் நடிக்காமல் இருந்தார்.
14 ஆண்டுகளாக படுக்கையில் கிடந்த புகழ் பெற்ற இயக்குநர்: ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத மனைவி
1995-ல் வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தாலும் இப்படத்தில் விஜய்-அஜீத் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் தனியாக இளையராஜா இசையில் அஜீத் நடிக்கவில்லை. அந்தக்குறையைப் போக்க வந்த படம் தான் ‘தொடரும்‘. இப்படத்தில் அஜீத்துடன் தேவயானி ஜோடியாக நடித்திருப்பார். ஏற்கனவே காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீராவும் இப்படத்தில் இணைந்தார்.
இப்படத்தை இயக்கியது பிரபல நடிகரும், கே.எஸ்.ரவிக்குமாரின் அசிஸ்டென்ட்டாக பணிபுரிந்தவருமான ரமேஷ் கண்ணா தான். அப்போது படையப்பா படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிக் கொண்டிருந்தார்.
இதனிடையே ரமேஷ்கண்ணாவிற்கு தொடரும் பட வாய்ப்பு வரவே படையப்பா படத்தின் வேலைகளை முடித்துவிட்டு பின்னர் இப்படத்தில் தனியாக இயக்குநர் அவதாரம் எடுத்தார். தனது முதல் படத்திற்கே இசைஞானியை இசையமைக்க வைத்தார். இப்படம் பற்றி இயக்குர் ரமேஷ்கண்ணா கூறும் போது, “அஜீத் நடித்த ஒரே இளையராஜா படம் என்னுடைய படம் தான். இது ஒரு கிஃப்ட் என்றே கூறலாம்.
மைசூரில் படப்பிடிப்பு எடிட்டிங் வேலைகள் முடித்து விட்டு ரீல்களை இளையராஜாவுக்கு அனுப்பி வைப்பேன். அதற்கு இளையராஜா டைரக்டர் நீங்க வர மாட்டீங்களா? முதல் படத்திலேயே இப்படியா என்று செல்லமாக கேட்டார். ஏனென்றால் அப்போது படையப்பா படத்தின் உதவி இயக்குநராக மும்முரமாக அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருந்தால் ரெக்கார்டிங் பணிகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை“ என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் ரமேஷ்கண்ணா.