14 ஆண்டுகளாக படுக்கையில் கிடந்த புகழ் பெற்ற இயக்குநர்: ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத மனைவி

திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு ஜாம்பவான்களை மக்களிடம் கொண்டு சேர்த்த முக்கிய இயக்குர்கள் ஏ.பி.நாகராஜன், பீம்சிங், ஸ்ரீதர், பி.ஆர். பந்தலு ஆகியோர் ஆவர். இவற்றில் இயக்குநர் ஸ்ரீதர் தன்னுடைய ஜனரஞ்சக, கமர்ஷியல் பார்முலா மூலம் பல படங்களை வெள்ளி விழா காண வைத்தார். வசனகார்த்தாவாக சில படங்களில் பணியாற்றியவர் ஜெமினி கணேசன் நடித்த கல்யாணப் பரிசு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை, சுமை தாங்கி, வெண்ணிற ஆடை, சிவந்த மண், உரிமைக்குரல், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற எத்தனையோ சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தவர். இயக்குநர் ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே திரைப்படங்கள் ஓடியது ஒரு காலம்.

ஆனால் அந்த ஸ்ரீதரின் கடைசிக் காலம் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வேதனையிலேயே கழிந்தது. அந்த அஸ்தமன காலத்தில் அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்கு கண்ணாக கவனித்துக் கொண்டவர் அவரின் மனைவி தேவசேனா.

மருத்துவமனையில் சீரியசான நிலையில் , சிகிச்சையில் இருக்கும்போது, சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர். உடனே தேவசேனா, ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார். கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு, பரிதாபமாக கேட்பாராம்! எவராக இருந்தாலும் அடுத்த நிமிடமே ஸ்ரீதரைப் பார்க்க ஓடோடி வந்து விடுவார்களாம் !

வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்: எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்

கணவரின் அன்புக்குரிய அந்த நண்பர்களை வரவழைத்து , அவர்களை கணவரோடு பேச வைத்து, கணவரின் கடைசி நிமிட எதிர்பார்ப்புகளையும் சிறப்பாகவே பூர்த்தி செய்தவர் புண்ணியவதி, ஸ்ரீதரின் மனைவி தேவசேனா…!

.சில வேளைகளில் ஸ்ரீதர் பழைய ஞாபகங்களை இழக்கிறார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரைப் பார்க்க வரும் முக்கியப் பிரமுகர்களிடம் , சிறிது நேரமாவது பழைய கதைகளை ஸ்ரீதரிடம் பேசச் சொல்வார்களாம்..! ஆனால், ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட, தேவசேனா கணவர் சொல்வதைப் புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்…!

இவ்வாறு பதினான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத தேவசேனா, கட்டுக்கு அடங்காத கண்ணீர் வழிய நின்றது அவரின் இறப்பில் மட்டும் தான். ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு மனைவியாக வந்து வாய்த்தது எனலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.