முதல் படத்திலேயே காதல் நாயகன் முரளியை வைத்து இயக்கி வெற்றிகண்டவர் தான் நாகராஜ். இயக்கிய படம் ‘தினந்தோறும்‘. மெல்லிய காதல் கதையைக் கொண்ட இப்படத்தினை இயக்கியவர் நாகராஜ். தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பும் ரசிக்கும் வண்ணம் அற்புதமான காதல் கதையைக் கையில் எடுத்து வெற்றி கொடுத்தவர்.
நாகராஜன் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார். சிறந்த நடிகரும் கூட. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து நின்றவர். இவர் ‘ஆகாயம்’ என்ற பெயரில் முரளியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தாராம்.
படத்திற்கு இசை இளையராஜா. அதனால் அவரிடம் கதை சொல்ல நாகராஜன் இளையராஜா வீட்டிற்கு செல்ல கதை முழுவதையும் கேட்டுவிட்டு நான்கு டியூன்கள் போட்டாராம் இளையராஜா. ஆனால் அவை எல்லாம் நாகராஜனுக்கு திருப்தி இல்லயாம். அதை அவர் இளையராஜாவிடம் சொல்ல ‘இதில் என்ன உனக்கு பிடிக்கவில்லை’ என கேட்டிருக்கிறார்.
பெரியாரைக் கண்டாலே ஆகாத எம்.ஆர்.ராதா.. ரொம்ப புடிச்ச தலைவர் இவர்தானாம்…
அதற்கு நாகராஜன் காதலுக்கு மரியாதை ‘என்னை தாலாட்ட வருவாளா’ மாதிரி ஒரு டியூன் வேண்டும் என சொல்ல உடனே இளையராஜா ஹார்மோனிய பெட்டியை மூடிவிட்டு சட்டென கோபமாக ‘நான் வாந்தி எடுத்ததை என்னையே சாப்பிட சொல்கிறாயா?’ என கோபத்துடன் கேட்டு அப்படியே வெளியே நடந்து விட்டாராம்.
பிறகு அங்கிருந்து கிளம்பிய நாகராஜனை மீண்டும் அழைத்து இளையராஜா பழைய சில விஷயங்களை பேசி மறுபடியும் டியூன் போட்டு கொடுத்தாராம். இது நாகராஜனுக்கு பிடித்ததும் ‘உதாரணமா என எதையும் சொல்லாதே. டியூனில் எதாவது பிரச்சினை என்றால் மட்டும் சொல்’ என சொல்லி பாட்டை கொடுத்தாராம்.
இந்தத் தகவலை சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் இயக்குநர் நாகராஜ் பகிர்ந்துள்ளார். மேலும் தனது குடிப்பழக்கத்தால் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பினை இழந்ததையும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க போன்ற படங்களுக்கு வசனங்கள் எழுதியதும் நாகராஜ்தான்.