தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுப்பதில் கை தேர்ந்த இயக்குநர் யாரென்றால் அது இயக்குநர் ஞானராஜசேகரகன் தான். வரலாற்றுக் கதைகளை உள்ளது உள்ளபடியே சினிமாவிற்காக எதையும் மிகையாக்காமல் இந்தத் தலைமுறை மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தலைவர்களின் கதைகளை படமாக எடுப்பார். இவருடைய பாரதி, பெரியார், ராமானுஜன் போன்ற படங்களே இதற்குத் தகுந்த சான்று.
வேலூர் மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட ஞானராஜசேகரன், சென்னையில் முதுகலை இயற்பியல் பயின்றவர். பின்னர் குடிமைப் பணித் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதன் முதலாக இவர் கேரளாவில் தனது அரசுப் பணியைத் துவக்கினார். தீராத கலைத்தாகம் கொண்ட ஞானராஜசேரகன் எழுத்துத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
பாக்ஸிங் போட வந்தவருக்கு எம்.ஜி.ஆர். வைத்த ராஜ விருந்து…முகமது அலி vs எம்.ஜி.ஆர் சந்திப்பு!
எனவே ஓய்வு நேரங்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதினார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த அவர் அப்போது மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாரதி படத்தை எடுக்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்கு முன்பே அபிஷேக் நடித்த மோகமுள், நாசர் நடித்த முகம் ஆகிய வித்தியாசமான கதைக்களங்களைத் கையாண்டு வெற்றி கண்டார்.
இதன்பின் பாரதி படத்திற்கான ஏற்பாடுகள் தயாரானது. இதற்கான நடிகர்களைத் தேர்வு செய்யும் போது, ஷாயாஜி ஷிண்டேவைத் தேர்வு செய்தார். அவருடைய தோற்றமும் உச்சரிப்பும் பாரதியார் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் ஷாயாஜிஷிண்டே நடிக்க ஒப்பந்தமானார். அடுத்ததாக பாரதியாரின் மனைவியாக நடிக்க செல்லம்மாவாக யாரைத் தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் நீடித்த போது முதன் முதலாக நினைவுக்கு வந்தவர் நடிகை சுவலட்சுமி. சுவலட்சுமி அப்போது லவ்டுடே, ஆசை, கோகுலத்தில் சீதை போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.
ஆனால் அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியாத காரணத்தால் தேவயானியைத் தேர்வு செய்தார். படத்தில் தேவயானி பாரதியின் மனைவி செல்லம்மாகவே வாழ்ந்திருப்பார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.
இளையராஜாவின் இசையில் பாரதி படப் பாடல்கள் அனைத்தும் பாரதியாரே மீண்டும் உயிர்பெற்று வந்து பாடுவது போல் அமைந்திருந்தது. இப்படத்தில் பாரதியாரின் கவிதைகளே பாடல்களாக உருப்பெற்றன. அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகி, படமும் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின் ஞான ராஜசேகரன் பெரியார் வாழ்க்கை வரலாற்றை சத்யராஜ், குஷ்பு நடிப்பில் இயக்கினார். அதன்பின் கணிதமேதை ராமானுசன் வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக எடுத்தார்.