நான் கை கால கட்டி கஷ்டப்பட்டு நடிச்சேன்… ஆனா இவரு ஒரு பொருளை வச்சி என்னைவிட 3 மடங்கு லாபம் பாத்துட்டார்… கமலஹாசன் பகிர்வு…

Published:

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தனது ஐந்து வயது முதல் இன்று வரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நடித்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன். இவரது இயற்பெயர் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் என்பதாகும். இவர் இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக கமலஹாசன் கருதப்படுகிறார். தனது நடிப்பிற்காக நான்கு தேசிய திரைப்பட விருதுகள், 9 மாநில திரைப்பட விருதுகள், நான்கு நந்தி விருதுகள், ஒரு ராஷ்டிரபதி விருது, இரண்டு பிலிம்பேர் விருதுகள், 18 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள், கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியர் விருது ஆகிய விருதுகளை வென்றவர்.

எந்த கதாபாத்திரமானாலும் அபாரமாக நடிப்பவர் கமலஹாசன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இணையாக போற்றப்படுபவர் கமலஹாசன். நடிப்பது மட்டுமல்லாமல் இவரது தமிழ் பேச்சு மற்றும் உச்சரிப்புக்குமே ரசிகர்கள் ஏராளம். சின்னத்திரை பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏழு வருடமாக தொகுத்து வழங்குபவர் கமலஹாசன்.

மக்களுக்கு தொண்டு செய்ய மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்த கமலஹாசன் அரசியலையும் சினிமாவையும் பார்த்துக் கொண்டு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி தனது 65 ஆவது வயது தாண்டிய போதும் பிஸியாக ஓடிக் கொண்டிருப்பவர் உலகநாயகன் கமலஹாசன்.

சமீபத்தில் அவர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர் மலேசியா என பல நாடுகளிலும் பல மொழிகளும் டப்பிங் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. பரதநாட்டிய கலையை கற்றுத் தேர்ந்தவர் நடிகர் கமலஹாசன் மற்றும் அபாரமான மேடைப் பேச்சாளர் ஆவார்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலஹாசன், 80களில் சினிமாவை பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார். நடிகர் ராமராஜனை பற்றியும் புகழ்ந்து பேசி உள்ளார். அவர் கூறியது என்னவென்றால், 80கள் 90களில் நான் விதவிதமான கெட்டப்புகளை போட்டு நடித்து வந்தேன். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் குட்டை மனிதனாக நடிப்பதற்காக எனது கை கால்களை கட்டிக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு அந்த படத்தில் நடித்தேன். ஆனால் நடிகர் ராமராஜன் அவர்களோ கரகாட்டக்காரன் திரைப்படத்தில் தலையில் கரகத்தை வைத்துக் கொண்டு, அந்த ஒரு பொருளை மட்டும் வைத்து என்னை விட மூன்று மடங்கு லாபம் பார்த்து விட்டார், பேரும் புகழும் அடைந்து விட்டார் என்று வேடிக்கையாக பகிர்ந்துள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.

மேலும் உங்களுக்காக...