வெண்மேகம் ஷூட்டிங் அப்போ நயன்தாரா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல… சரண்யா மோகன் பகிர்வு…

Published:

கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் சரண்யா மோகன். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார். சரண்யாவின் பெற்றோர்கள் இருவரும் பாரம்பரிய நடன கலைஞர்கள் மற்றும் நடன ஆசிரியர்கள் ஆவர். அவர்களிடமிருந்து சரண்யா பரதநாட்டியம் கற்று தேர்ந்தார். சரண்யா நடன பள்ளியில் நடனம் ஆடுவதை பார்த்த மலையாள இயக்குனர் பாசில் மூலம் திரையுலகுக்கு வந்தார்.

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாகவே மலையாள சினிமாவில் நுழைந்தவர் சரண்யா மோகன். மம்முட்டி மோகன்லால் போன்ற முன்னணி மலையாள நடிகர்கள் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சரண்யா மோகன். தமிழில் 2008 ஆம் ஆண்டு தனுஷ், நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அடுத்ததாக ‘ஜெயம் கொண்டான்’, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘பஞ்சாமிர்தம்’ ஆகிய படங்களில் நடித்தார். 2009 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் சரண்யா மோகன். வெண்ணிலா கபடி குழு திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து ‘ஈரம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வேலாயுதம்’, ‘ஒஸ்தி’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சரண்யா மோகன். இது தவிர மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் மற்றும் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார் சரண்யா மோகன்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சரண்யா மோகன், தமிழ் திரையுலகில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த யாரடி நீ மோகினி திரைப்பட ஷூட்டிங்கில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் யாரின் நீ மோகினி படத்தில் வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் ஷூட்டிங் நடக்கும் போது எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அந்த ஷூட்டிங் நடக்கிற இடம் ரொம்ப உள்ள தள்ளி இருந்தது. ஹாஸ்பிடல் வரணும்னா கூட அவ்வளவு சீக்கிரமாக வர முடியாது ரொம்ப தூரமா இருந்தது. உடம்பு சரி இல்லாம இருக்கும்போது தான் அந்த ஷூட்டிங்கில் நான் நடிச்சேன். அப்போ நயன்தாரா மேம் என்னை ரொம்ப நல்ல கேர் பண்ணி பார்த்துக்கிட்டாங்க அவங்க அப்படி என்ன கவனிச்சுப்பாங்க அப்படினு நான் நினைச்சு கூட பாக்கல என்று பகிர்ந்துள்ளார் சரண்யா மோகன்.

மேலும் உங்களுக்காக...