இவங்க படத்துல வில்லனா நடிக்கணும்… நடிகர் ஆதி ஓபன் டாக்…

நடிகர் ஆதி பினிசெட்டி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் நடிகராவார். இவரது தந்தை ரவிராஜா பினிசெட்டி பிரபலமான இயக்குனர் ஆவார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதனால் சினிமாவில் நாயகனாகும் வாய்ப்பு அவருக்கு எளிமையாக அமைந்தது.…

aadhi

நடிகர் ஆதி பினிசெட்டி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் நடிகராவார். இவரது தந்தை ரவிராஜா பினிசெட்டி பிரபலமான இயக்குனர் ஆவார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதனால் சினிமாவில் நாயகனாகும் வாய்ப்பு அவருக்கு எளிமையாக அமைந்தது.

ஆரம்பத்தில் தெலுங்கில் நாயகனாக அறிமுகமான ஆதி பினிசெட்டி 2006 ஆம் ஆண்டு மிருகம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய ஈரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாக ஆனார் ஆதி.

அதை தொடர்ந்து அய்யனார், கோச்சடையான், வல்லினம், யாகவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் ஆதி. இவர் தன்னுடன் நடித்த நடிகையான நிக்கி கல்ராணியை திருமணம் செய்து இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஆதி தான் சினிமாவில் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் எனக்கு கதை தான் முக்கியம் கதை நன்றாக இருந்தால் நான் வில்லனாக கூட நடிக்க தயார். குறிப்பாக அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது என்று ஓபனாக பேசியிருக்கிறார் ஆதி பினிசெட்டி.