குடும்பம் குழந்தைகளை மறந்து உழைப்பைக் கொட்டிய இயக்குநர் பிரசாந்த் நீல்.. சலார் படத்துக்கு இப்படி ஒரு டெடிகேஷனா?

By John A

Published:

கே.ஜி.எப் படம் மூலம் இந்திய சினிமா உலகையை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். அதுவரை சாண்டல்வுட் பக்கம் தலைகாட்டமல் இருந்த இந்திய சினிமாவையே தனது ஒரே படத்தின் மூலம் உலகம் முழுக்க கன்னட சினிமா உலகையே உயர்த்திப் பிடித்தார் பிரசாந்த் நீல். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என கே.ஜி.எப்-ன் புகழ் விண்ணை முட்ட பான் இந்தியா படங்கள் இந்திய சினிமாவில் வரிசை கட்ட ஆரம்பித்தன.

ஆக்சன் மற்றும் சென்டிமெண்டில் அதகளப்படுத்திய யஷ் இந்திய சினிமாவின் முக்கிய நாயகனானார். பெரும் பெயரையும், புகழையும் வாரிக் கொடுத்த கே.ஜி.எப் படத்திற்குப் பின் பிரசாந்த் நீல் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த போது சலார் உறுதியானது. பாகுபலிக்குப் பின் சரியான வெற்றியைக் கொடுக்காத பிரபாஸ் சலார் படத்தில் ஹீரோவாக கமிட்ஆனார். இவருடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்தனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படம் ரீலீஸ் ஆகி இந்த வருட இறுதியின் பிளாக் பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. கே.ஜி.எப் போலவே முழுக்க ஆக்சன், சென்டிமெண்ட் என தனது ஏரியாவில் புகுந்து விளையாடியிருக்கிறார் பிரசாந்த் நீல்.

எங்களுக்கு நடிப்பு மட்டும் தொழில் இல்ல… வயக்காட்டிலும் இறங்குவோம்.. விவசாயத்தில் கெத்து காட்டும் நடிகர்கள்

இந்நிலையில், சலார் படம் குறித்து பிரசாந்த் நீல் கூறுகையில், சலார் படப்பிடிப்பால் என் மனைவியுடனும், குழந்தைகளுடனும் நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்குச் செல்வேன். நான் ஒரு சரியான தந்தையாக, கணவனாக இல்லை.“ என்று கூறியிருக்கிறார். இதனால் சலார் படம் மூலம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பாதித்ததை வேதனையுடன் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

ஆனால் அவருடைய டெடிகேஷனுக்கு அர்த்தம் கொடுக்கும் விதமாக கே.ஜி.எப் போன்றே மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படமாக சலார் வந்துள்ளது. பிரபாஸ்-க்கும் இந்தப்படம் பாகுபலி போன்ற ஒரு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுக்கும் என்றே சொல்லலாம். சலார் கே.ஜி.எப் படத்தை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.