எனக்கு இதைப் பண்ண தெரியாது பண்ணவும் மாட்டேன்… வாணி போஜன் பகிர்வு…

வாணி போஜன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பாதகா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தை வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஆவார். கல்லூரி படிப்பை முடித்த பின்பு கிங்பிஷெர் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோவில் விமான…

Vani Bhojan

வாணி போஜன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பாதகா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தை வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஆவார். கல்லூரி படிப்பை முடித்த பின்பு கிங்பிஷெர் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோவில் விமான பணிப்பெண்ணாக தனது கேரியரை தொடங்கினார் வாணி போஜன்.

மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்த வாணி போஜன் தி சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்தார். இதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புக் கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் தோன்றினார். பின்னர் 2012 ஆம் ஆண்டு ‘அதிகாரம் 79’ படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு சன்டிவியின் பிரபல தொடரான ‘தெய்வமகள்’ தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் வாணி போஜன். இது தவிர விஜய் டிவி மற்றும் ஜெயா டிவி தொடர்களிலும் நடித்தார் வணிபோஜன்.

அடுத்ததாக வெள்ளித்திரைக்கு வந்த வாணிபோஜன் ‘ஓ மை கடவுளே’, ‘ராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். இது தவிர தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார் வாணி போஜன்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட வாணி போஜன் தனது வாழ்க்கை முறையை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், எனக்கு ஒரு வீடு இருக்கு, ஒரு கார் இருக்கு அது போதும். எனக்கு சிம்பிள் ஆன லைப் தான் பிடிக்கும். பெருசா ஆடம்பரம் பண்ண தெரியாது பண்ணவும் மாட்டேன் என்று பகிர்ந்துள்ளார் வாணி போஜன்.