நடிகர் அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். 90 களில் அறிமுகமான இவருக்கு, தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவ்வாறு வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்தப் படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.
பிரியம், கங்கா கவுரி, காத்திருந்த காதல், துள்ளித் திரிந்த காலம் போன்றவை இவரது துவக்ககாலத் திரைப்படங்களாகும். கடைசியாக இவர் நடித்த மலை மலை, துணிச்சல், மாஞ்சாவேலு போன்ற திரைப்படங்கள் தோல்விகரமான படங்களாகும்.
என்னை அறிந்தால் படம் இவருக்கு மிகச் சிறப்பான கம்பேக் கொடுக்க, அவர் தற்போது வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், சாகோ, மாஃபியா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அக்னிச் சிறகுகள், வா டீல், பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
தற்போது நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் குறித்த ஒரு பதிவினைப் பதிவிட்டுள்ளார். அதாவது, “பசியாக இருக்கும் நாய்க்கு உணவிட வேண்டும் அப்பா, அதன் குட்டிகள் பசியால் தவிக்கும்.” என்று தனது மகன் கூறியதாக அருண் விஜய் கூறியதுடன், “இரக்கமுள்ள மகனாக என் மகன் இருப்பதைக் கண்டு அப்பாவாக நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.