கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க கனவு காண்கிறேன்… தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படம்!!

By Staff

Published:

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் ரம்யா, இவர் 2004 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பைனலிஸ்ட்டுகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கப்போவது யாரு?, ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நம்ம வீட்டுக் கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக பிரபலமான இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது, ஓகே கண்மணி, வனமகன், கேம் ஓவர், ஆடை போன்ற படங்களில் துணை நடிகையாக, மங்காத்தா, மொழி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

58beb3c887b7540853e4f753091acf51

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் 10 நாட்களில் விவாகரத்திற்கு அப்ளை செய்து அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். தற்போது உடல் பயிற்சி செய்தல், பியூட்டி டிப்ஸ் சொல்லுதல், சமைத்தல், போட்டோஷுட் என தன்னுடைய யுடியூப் சேனலில் பிசியாக இருந்துவருகிறார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடும் அவர், தற்போது ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு, “கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க கனவு காண்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment