என் பெயரில் பேஸ்புக் அக்கௌண்ட்டா? ஷாக் ஆன பாவனா!!

By Staff

Published:

நடிகை பாவனா  தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்தியப் படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தார். 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் நம்மல் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த இவர் 3 ஆண்டுகளுக்குள் 18 படங்களில் நடித்துவிட்டார்.

அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலையிலே, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் புகழ் பெற்றார்.

515cbe5ec541a10749d3cbf15677c728

இவர் நடிப்பில் கன்னட மொழியில் வெளியான 99 சிறப்பான வரவேற்பினைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர், திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கால் வீட்டில் இருந்துவரும் இவர், மற்ற நடிகைகள் சந்திக்கும் ஒரு பிரச்சினையினை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது இவர் பெயரில் போலியான பேஸ்புக் அக்கௌண்ட் உள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “என் பெயரில் பேஸ்புக் அக்கௌண்ட் இருப்பது குறித்து நான் ஷாக் ஆனேன், நான் பேஸ்புக்கில் இல்லை. எனவே தயவுகூர்ந்து  ரசிகர்கள் யாரும் அந்தப் போலியான அக்கௌண்ட்டை பின் தொடர வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.

Leave a Comment